Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
உலகம் முழுவதும் காலநிலை மாற்றமானது உயிர்பல்வகமைகளை எவ்வாறு பாதித்து வருகின்றது என்பதை நாம் அவதானித்து வருகின்றோம். அவற்றை பராபரிக்க வேண்டிய கடமை நம்மை சார்ந்துள்ளது. ஒரு நிலையான சுற்றுச்சூழல் அமைப்பானது சூழலியல் சார் மீள்தன்மையை உறுதுபடுத்துகின்றது எனலாம். கால நிலை மாற்றம் உட்பட பல்வேறு மனித நடவடிக்கைகளும் இவற்றிற்க்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இந்த கட்டுரையின் மூலம்,
கடல் சுற்றுச்சூழலின் சேவைகள் என்றால் என்ன?
கடற்சூழல் அமைப்பானது உலகம் முழுவதும் 70 % மான மேற்பரப்பை கொண்டுள்ளதுடன் அவற்றில் கரைந்த நிலையில் உப்புகளும் , தனித்துவமான உயிருள்ள உயிரற்ற பொருட்களையும் கொண்டுள்ளது. இந்த சூழலானது உள்நாட்டு நில பிரதேசத்தில் இருந்து 100km லிருந்து ஆரம்பிப்பதுடன் 50m ஆழம் கொண்டதாகவும் இருக்கும். இவற்றுள் கடற்கரையோரங்கள் , ஈரநிலங்கள், கண்டல் சூழல், மணற்கடற்கரைகள் , புல்படுக்கைகள் , முருகைபொழிவுகள் , சிப்பி பாறைகள் என்பன அடங்கும்.
கடல் சுற்றுச்சூழல் சேவைகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் மீன் அறுவடைகள், காட்டு தாவரங்கள் மற்றும் விலங்கு வளங்கள் மற்றும் நீர் ஆகியவை அடங்கும். இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வாழ்வாதர நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக அமைகின்றது. அதற்க்கு மேலாக சுற்றுலாத்துறை, பொழுதுபோக்கு , நீர்ப்பாசனம் என்பற்றுகும் முக்கியமாக அமைகின்றது. கடற்சூழலானது பல்வேறுபட்ட தனித்துவமான சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஒன்றான முருகைகற்பாறைகள் மிகசிக்கலான கட்டமைப்பை கொண்டதுடன் மீன்கள் , நீர்வாழ் முள்ளந்தண்டற்ற விலங்குகள் போன்ற பல நீர்வாழ் உயிரனங்களின் வாழிடமாகவும் இருக்கின்றது எனலாம். மேலும் கடற்சூழலானது உலகின் பிரதான காபன் சேமிப்பாகவும் , மாசு கட்டுப்பாடு, புயல் பாதுகாப்பு, வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் கரையோர நிலைப்படுத்திகளாகவும் செயல்படுகின்றன. இவற்றை பற்றி மேலும் படிக்க.
காலநிலை மாற்றம் கடற்சூழலின் சேவைகளை எவ்வாறு பாதிக்கின்றன?
அதிகமான மக்கள் கடல்களின் ஒப்பீட்டளவில் ஆராயப்படாத தன்மை மற்றும் அவற்றின் பரந்த தன்மை ஆகியவை கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை மனித நடவடிக்கைகள் பாதிக்கபோவதில்லை என்றும் , கடல் சுற்றுச்சூழலின் சுயசுத்திகரிப்பு திறன் மிகப்பெரியதாக இருப்பதால், கடல்களை மாசுபடுத்துவது கடினம் என்றும் தவறாக நினைக்கின்றனர். இருப்பினும் இன்றைய காலநிலை மாற்றத்தால் கடல் வெப்பனிலை அதிகரிப்பு ,கடலின் காபன் அளவு அதிகரிப்பு , கடல்மட்ட அதிகரிப்பு என்பற்றின் வாயிலாக அது தவறு என்பது மக்கள் உணர்ந்துள்ளனர்.
இலங்கையானது 1340km கடற்கரையோரங்களை கொண்டுள்ளது. இவை கால நிலை மாற்றத்தால் நிச்சயமான பாதிப்பை முகங்கொடுக்கின்றன. மனித நடவடிக்கைகள் இப்போது உலகின் எஞ்சியிருக்கும் பல கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் அவை வழங்கும் நன்மைகளையும் அச்சுறுத்துகின்றன.மேலும் வாசிக்க.
பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் அதிகரிப்பது கடல்வாழ் உயிர்பல்வகமைகளையும் பாதிக்கின்றன.மற்றும் கால நிலை மாற்றமானது கடல் அமிலமயமாதலுக்கும் வழிவகுக்கின்றது. இதன் காரணமாக முருகைகல் பொழிவுகள் வெளிறலுக்குட்படுவதோடு கடற்தீவுகளும் பாதிப்படைகின்றன. அத்தோடு கடலில் பாசிப்பூக்கள் (Algal Blooms) ஏற்படுவதோடு , கடல் அமிலமயமாதலால் அங்கு நைதரசன் பதித்தல் செயற்பாடும் அதிகரிக்கின்றது.பெருங்கடல்களில் உவர்தன்மை மற்றும் வெப்பனிலை அதிகரிப்பினால் கடல் அடுக்குகள் அதிகரிக்கபடும் என எதிர்பார்க்கபடுகின்றது. இதன் விளைவாக மேற்பரப்பிலுள்ள நீருக்கு செங்குத்தான போசணை ஓட்டம் குறைகின்றது. Oligotrophic நிலைமைகள் கடலின் பல பகுதிகளுக்கு பரவி, உலகளாவிய கடல் உற்பத்தி மற்றும் உயிரியல் கார்பன் பம்பை (Biological Carbon Pump) எதிர்மறையாக பாதிக்கலாம்.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுடன், முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளும் கடல் வளங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் காலநிலை மாற்றத்திற்கு முழுமையாக புரிந்து கொள்ளப்படாத வழிகளில் விளைவுகளை காண்பிக்கும். ஆயினும்கூட, சுற்றுச்சூழலின் மீள்தன்மையானது அதன் உயிரியல் கூறுகளின் உயிரியல்சார் பண்புகள், செயல்பாட்டு பண்புகள், மரபியல் பண்புகள், உருவவியல் பண்புகள், ஒலியியல் பண்புகள் மற்றும் கட்டமைப்பு பண்புகளின் பிளாஸ்டிசிட்டியை (சூழல் மாற்றங்களுகு ஏற்ப விளைவுகளை உருவாக்குதல்) பெரிதும் சார்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க.
கடற்சுற்றாடல் அழிவுகளால் உள்நாடு மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்படும் பாதிப்புகள்
2021 ஆனது சமுத்திரங்களின் வெப்பனிலை அதிகமாக காணப்பட்ட ஆண்டாக அமைந்தது.வெப்பனிலை அதிகரிப்பு கடலின் வெப்பவலைகள் அதிகமாக் உண்டாவதற்கு வழிகோலுகின்றது. கடந்த ஆண்டில், கடலால் உறிஞ்சப்பட்ட அதிகப்படியான வெப்பமானது ஒவ்வொரு செக்கனுக்கும் ஏழு ஹிரோஷிமா அணுகுண்டுகளை வெடிக்கச் செய்வதற்கு சமமானதாகும். கடந்த தசாப்தத்தில், கடல் வெப்ப அலைகளால் ஆஸ்திரேலியாவின் 45% மான கடற்கரையோரங்களில் பவளப்பாறைகள், கெல்ப், கடற்பாசிகள் மற்றும் சதுப்புநிலங்கள் உட்பட முக்கியமான உயிரினங்களின் இறப்பை ஏற்படுத்தியுள்ளன. இங்கு அழிக்கபட்ட பவளபாறையானது great barrier வகைகளை சார்ந்தது.
மார்ச் 2016 அறிக்கையயின் படி முன்னர் எதிர்பார்த்ததை விட பவளபாறைகளின் வெளுப்பு மிகவும் பரவலாக இருப்பதோடு கடல் வெப்பநிலை வெப்பமடைவதன் விளைவாக வடக்குப் பகுதிகளை சார்ந்த பாறைகள் கடுமையாக பாதிக்கின்றது எனவும் கூறப்ட்டது. great barrierன் புது முருகைபொழிவுகள்(baby corals born on the Great Barrier Reef) எண்ணிக்கை 2018 ல் குறைந்துள்ளதாகவும். 500க்கு மேற்பட்ட முருகைபொழிவுகள் வெளிறலுக்கு உடப்ட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் 2022 மார்ச்சில் இன்னுமொரு பாரிய பவளபாறை வெளிரல் உறுதிபடுத்தபட்டது. இவை பவளப்பாறைகளின் எதிர்காலம் குறித்து கவலைபட வைக்கின்றது என அவர் கூறினார்.
ஆகஸ்ட் 2019 இல் வடகிழக்கு பசிபிக் முழுவதும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வரைபடமானது அசாதரண போக்கை காட்டியது. மேலும் அது 2020 வசந்தகாலம் (spring) வரை தொடர்ந்தது. ஆனால் கடல் வெப்ப அலைகள் வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் பரவுவதால் ஓரளவு மிதமாக காணப்பட்டது. மேலும் வாசிக்க
தற்போது கால நிலை மாற்றமானது ஹவாய் தீவுகள் மற்றும் அமேரிக்காவுடன் இணைந்துள்ள தீவுகள் , மெக்சிகோ , கரிபியேன் தீவுகளில் வாழும் மீனவ சமூகங்களை பெரிதும் பாதித்துள்ளது.
சராசரி கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் தவிரத்து , தீவிர கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் புயல் அலைகள் மூலம் நிகழ்கின்றன, அவை இந்தியாவின் மேற்கு கடற்கரையில் குறைவாகவே காணப்படுகின்றன. இது இலங்கைக் கடற்பரப்பில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இலங்கையில் கூட, கடல் அமிலமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக முக்கியமான பவளப்பாறைகள் மற்றும் கடல் இனங்களை நாம் இழந்து வருகின்றோம்.
கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்காலம் எவ்வாறாக அமையும்?
“Ocean has never died and will not die” என வாதிடுவது பாதுகாப்பான ஒன்று என சிலர் வாதிடுகின்றனர். நிச்சயமாக, கடல்கள் பரந்தவை அத்தோடு கடல் வாழ் உயிரினங்களைத் தொடர்ந்து நிலவுகைக்கான வழியைக் கொண்டுள்ளன, ஆனால் இந்த எண்ணற்ற அச்சுறுத்தல்களுடன் அதன் ஆரோக்கியமான வாழ்நாளை உறுதிப்படுத்த முடியாது. ecosystem modelling software is Ecopath with Ecosim (EwE) எனப்படும் Software மீன்பிடித்தல் போன்ற கடல் உணவு வலைகளின் எதிர்காலத்தைத் தடுக்கவும் முன்னறிவிக்கவும் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிற அழுத்தங்களை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இது அடுத்த சில தசாப்தங்களுக்குள் கடல் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் அன்னிய உயிரினங்களின் அதிகரிப்பதனால் ஏற்படும் தீங்குகளையும் இது காட்டுகிறது. கடல் வெப்ப நிலை அதிகரிப்போடு அன்னிய உயிரனங்களின் அதிகரிப்பும் சேர்ந்து அதிகரிக்கும் போது கடல்சூழல் அழிவுகள் குறையலாம் எனவும் எதிர்பார்க்கபடுகின்றது. இலங்கையின் கடலோரப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மீன் சார் விநியோக தொழில்கள் , உணவு வழங்கல், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பில் மீன்வளம் முக்கியப் பங்காற்றுகிறது.
கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை எவ்வாறு பாதுகாப்பது?
ஆரோக்கியமான கடல்வளமானது உணவுதேவை , சுற்றுலா , பொருளாதாரம் போன்ற சேவைகளை வழங்குகின்றது. மற்றும் உலகலாவிய ரீதியில் காலநிலை மாற்றத்தை குறைப்பதற்கும் பங்கு வகிகின்றது. பாரிஸ் உடன்படிக்கையில் எடுக்கபட்ட உறுதிமொழி “insufficient to hold the global average temperature increase to well below 2°C above pre-industrial levels, calling for a dramatic increase in the global mitigation effort and to reach targets for the United Nations Sustainable Development Goals. “
ஆகவே அதற்கான தணிப்பு அளவீட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சில தணிப்பு நடவடிக்கைகள் கூட alkalinization, cloud brightening, albedo enhancement போன்ற சூழலியல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை தற்போது நடைமுறைபடுத்தபட்டாலும் நிச்சயமற்ற போக்கை கொண்டுள்ளன. இதை பற்றி மேலும் வாசிக்க