Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகவில்லையா? உண்மை இதோ! 

உலகின் வட துருவமான கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகவே இல்லை என்றும், உருகுவதாகக் கூறி பகிரப்படும் தகவல்கள் தவறானவை என்றும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம்.

தகவலின் விவரம்: 

கடந்த ஆகஸ்ட் 29, 2022 அன்று கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் 7 ஜிகா டன் அளவுக்கு அதிகரித்துள்ளன. இதன்மூலமாக, அங்கு பனிப்பாறைகள் உருகுவதாகக் கூறப்படும் தகவல் தவறு என்று தெளிவாகிறது. தற்சமயம், கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் வளர்கின்றன, சுருங்கவில்லை. 

உண்மை அறிவோம்:
கிரீன்லாந்து ஒட்டுமொத்தமாக பனிப்பாறைகளை இழந்து வருவது உண்மைதான். 7 ஜிகா டன் அளவு பனி அதிகரிப்பு என்பது, ஓரளவு தரையில் பனியின் பிடிமானத்திற்கு உதவும் என்றாலும், ஒட்டுமொத்த நிறையில் (ஒட்டுமொத்த வளர்ச்சி அல்லது பனி இழப்பு) பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரையான காலத்தில் மட்டும் 84 ஜிகா டன் அளவுக்கு பனி இழப்பு கிரீன்லாந்தில் ஏற்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

அவர்கள் சொல்வது என்ன?
@Electroversenet எனும் ட்விட்டர் ஐடி கடந்த ஆகஸ்ட் 29, 2022 அன்று ‘#ClimateScam’ ஹேஷ்டேக் பயன்படுத்தி வெளியிட்டிருந்த பதிவில், ‘’கிரீன்லாந்தில் 7 ஜிகா டன் அளவிற்கு பனிப்பாறைகள் அதிகரித்துள்ளன. இதன்மூலமாக, அங்கே பனிப்பாறைகள் சுருங்கவில்லை, மாறாக வளர்ச்சியுடன் உள்ளதை உணர முடிகிறது,’’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அத்துடன், இந்த ட்வீட்டின் கமெண்ட் பகுதியில், இதுதொடர்பான கட்டுரை ஒன்றின் லிங்கையும் இணைத்திருந்தனர். அதில் முழுக்க முழுக்க, ‘கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதாகக் கூறப்படுவது முற்றிலும் மாறிவிட்டது. தற்போது, அங்கே பனிப்பாறைகள் அளவு அதிகரித்து வருகிறது,’ என்றே வாதிட்டிருந்தனர்.  

https://twitter.com/Electroversenet/status/1564569988102488065 Embed 

நாம் கண்டுபிடித்தது என்ன?
சமீபகாலமாக, சுற்றுச்சூழல் மீது ஆர்வமற்ற பலரும் ‘கிரீன்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகக் காணப்பட்ட பனிப்பாறைகள் உருகும் நிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது. அங்கே பனிப்பாறைகள் அளவு உயர தொடங்கியுள்ளது. இது மட்டுமின்றி, கிரீன்லாந்தில் உள்ள ஒட்டுமொத்த பனிப்பாறைகள் அளவும் நிகர வளர்ச்சி பெற தொடங்கியுள்ளது,’ என்று கூற தொடங்கியுள்ளனர். தங்களது கூற்றை நியாயப்படுத்தும் நோக்கில், ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகளை முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள் அல்லது அறிவியல் ஆய்வறிக்கைகளின் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள், மதிப்பீடுகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை தவறாகப் புரிந்துகொண்டு, மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.

மீண்டும் மீண்டும் வதந்தி பரப்புகிறார்கள்
முதலில், Electroverse என்ற பெயரில் செயல்படும் ட்விட்டர் ஐடி மற்றும் இணையதளம் இரண்டுமே மீண்டும் மீண்டும் தெரிந்தே பருவநிலை மாற்றம் தொடர்பான வதந்திகளை பரப்புகிறார்கள் என்று குறிப்பிட விரும்புகிறோம். ஏற்கனவே University of Maine வெளியிட்ட அறிவியல் மதிப்பீட்டறிக்கை ஒன்றை Electroverse தவறான முறையில் கையாண்டது பற்றி நாம் ஃபேக்ட்செக் செய்திருக்கிறோம். அப்போது, உலக வெப்பமயமாதல் என்பதே தவறான கூற்று என்றும், பூமி உண்மையில் குளிர்ச்சியாக உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

அதற்கும் முன்பாகக் கூட Electroverse சில வதந்திகளை பரப்பி வந்திருக்கிறது. இதற்கு உதாரணமாக, USA Today  வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Polar Portal
குறிப்பிட்ட ட்வீட்டில், அறிவியல் வரைபடம் ஒன்றை இணைத்துள்ளனர். அதனை பார்க்கும்போது, ஏதேனும் ஒரு அறிவியல் ஆய்வு தொடர்பான வரைபடம்போல தெரிகிறது. அந்த வரைபடத்தில் ஆகஸ்ட் 29, 2022 என தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ‘Surface Mass Balance’ என்றும் எழுதப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, USA Today FactCheck உதவியுடன் விவரம் தேடினோம். அப்போது, இது Polar Portal தரும் ஒரு வசதி என தெரியவந்தது. குறிப்பிட்ட இணையதளம் டென்மார்க்கைச் சேர்ந்த ஆராய்ச்சி அமைப்புகள் ஒன்றிணைந்து, கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள், கடல் உள்ளிட்டவற்றை அவ்வப்போது வெளியிடுவதற்காக தொடங்கப்பட்டதாகும்.

அந்த இணையதளத்தில் ‘Surface Conditions’ பிரிவிற்குச் சென்று நாமும் அதே ஆகஸ்ட் 29, 2022 தேதிக்குரிய வரைபடத்தை தேடினோம். அப்போது, குறிப்பிட்ட ட்வீட்டில் உள்ளதைப் போன்றே ஒரு வரைபடம் நமக்கும் கிடைத்தது.

‘PLEASE MAKE SURE TO READ THIS TEXT!’ பிரிவை கடந்து நாம் படித்தபோது, அந்த குறிப்பிட்ட வரைபடம் Surface Mass Balance (SMB) என்பதை காட்டக்கூடியது என்றும், அதனை Total Mass Balance (TMB) உடன் நாம் ஒருபோதும் தொடர்புபடுத்திக் கொள்ளவே கூடாது. TMB என்பதுதான் ஒட்டுமொத்த பனி அதிகரிப்பு அல்லது இழப்பைக் கணக்கிடுவதாகும்.

‘தினசரி கிரீன்லாந்தில் ஏற்படும் பனிப்பாறைகள் இழப்பு மற்றும் அதிகரிப்பு போன்றவற்றை அந்த வரைபடம் காட்டுகிறது. பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவு இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுதான் SURFACE Mass Balance ஆகும். இதில், ஆண்டு முழுவதும் சரிந்தோடும் பனியின் அளவு மீண்டும் மீண்டும் இடம்பெறாத வரையிலும் இது ஒரு சாதகமான நிகழ்வுதான்,’ என்று அந்த பிரிவின்கீழ் எழுதப்பட்டுள்ளது.

‘‘Surface mass balance என்பது முற்றிலும் Total mass balance-க்கு வேறுபாடான ஒன்றாகும். (உதாரணம்: ஒட்டுமொத்த அதிகரிப்பு அல்லது பனிப் படலத்தின் இழப்பு) இதில், பனிப்பாறைகள் உருகும்போது ஏற்படும் இழப்புகளும் கணக்கில் கொள்ளப்படும். வெப்பமான கடல்நீருடன் மோதுவதால் பனிப்பாறைகள் படிப்படியாக உருக நேரிடுகிறது. அப்போது, அதன் அடிமட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளும் கணக்கிடப்படுகிறது,’’ என்று அந்த பிரிவின்கீழ் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிபுணர்கள் இதுபற்றி சொல்வதென்ன?
டென்மார்க் வானிலை ஆய்வு நிறுவனத்தின்கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான தேசிய முகமையில் மூத்த சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர். மார்டின் ஸ்டெண்டல் என்பவரிடம் இதுபற்றி கருத்து கேட்டோம். அவர்தான், Polar Portal இணையதளத்தின் வெளியீட்டாளர் ஆவார். ‘கிரீன்லாந்தில் மீண்டும் பனியின் அளவு அதிகரித்து வருகிறது‘ என்ற கூற்று முற்றிலும் தவறானது என்று அவர் குறிப்பிட்டார்.

‘கடந்த 1997 முதலாக, கடந்த 26 ஆண்டுகளாக அங்கே பனிப்பாறைகள் உருகும் நிகழ்வு நடைபெறுகிறது. குறிப்பாக, செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரையான காலக்கட்டத்தில் மட்டும் கிரீன்லாந்தில் 84 ஜிகா டன் அளவுக்கு பனிப்பாறைகள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது,’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுபற்றி அவர் நமக்கு எழுதிய இமெயிலில் கூறியுள்ள விவரம் பின்வருமாறு:
‘’கிரீன்லாந்தில் உள்ள பனியின் Total Mass Balance (TMB) அளவை நீங்கள் கணக்கிட விரும்பினால், அடித்தளம் (the basal mass balance BMB) மட்டுமன்றி, மேல்மட்டம் அதாவது தலைப்பகுதி (the surface mass balance SMB), அவற்றின் விளிம்புகள் (the marine mass balance MMB) ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்வது நலம்’’. 

எனவே, TMB = SMB + MMB + BMB.

இதுபற்றி நமது ஆங்கில பிரிவினர் வெளியிட்ட விரிவான ஃபேக்ட்செக் கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த தகவல் எந்தளவுக்கு நம்பகமானது?

‘இந்த தகவல் முழு நம்பகமானது,’ என்று டாக்டர் ஸ்டெண்டல் கூறுகிறார். ‘’GRACE செயற்கைக்கோள்கள் உதவியுடன் total mass balance நாமே தன்னிச்சையாக மதிப்பிட முடியும். இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், இந்த செயற்கைக்கோள் உதவியுடன் கிடைக்கும் விவரம் அனைத்துமே சில மாதங்கள் முன்னோக்கியதாக இருக்கும்,’’ என்றும் அவர் தெரிவிக்கிறார். 
‘’செயற்கைக்கோள் உதவியுடன் MMB எனப்படும் ஒட்டுமொத்த பனி இழப்பு (அடித்தளம் மற்றும் குகைகளில் படிந்துள்ள பனி) அளவை கணக்கிடுவது எளிது. பனிப்பாறைகள் உருகும் வேகம், அவற்றின் தடிமன், வடிவம் உள்ளிட்ட விவரங்களையும் நாம் செயற்கைக்கோள்கள் மூலமாக சேகரிக்க முடியும். இதன்மூலமாகவே, MMB கணக்கிடப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஒளிவுமறைவின்றி கிடைக்கும் தரவு என்பதால் நாம் Greenland Ice Sheet-ல் ஏற்படும் ஒட்டுமொத்த பனி இழப்பு, வளர்ச்சிகளை எளிதாகக் கணக்கிடலாம்,’’ என ஸ்டெண்டல் சுட்டிக்காட்டுகிறார்.

குறிப்பாக, ‘’1, ஏப்ரல் 2002 முதல் 31, ஆகஸ்ட் 2021 வரையான காலத்தில் மட்டும் கிரீன்லாந்தில் சுமார் 4500 ஜிகா டன் அளவு பனி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலமாக, உலக அளவில் கடல்மட்டம் 1.3 செமீ அளவு உயர்ந்துள்ளது என்று Greenland Ice Sheet தெரிவிக்கிறது,’’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

Also, read this in English | Odia

Translated by: Parthiban S

Anuraag Baruah
Anuraag Baruah
Articles: 6