Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

காலநிலை மாற்றமானது இடம்பெயர்வு பறவைகளை எவ்வாறு பாதிக்கின்றது?

பறவைகளின் இடம்பெயர்வானது அவற்றின் இயற்கையான செயற்பாடாகும். பறவைகள் அவற்றின் இடம்பெயர்வுக்காக வருடாந்தம் பல நாடுகள், தீவுகள், கண்டங்கள் என்பவற்றை தாண்டி ஆயிரம் கணக்கான கிலோமீற்றருக்கும் மேலாக பயணம் செய்கின்றது. உண்மையில் அவற்றின் சிறிய அளவான உடலமைப்பிற்கு இது கடினமானதும் ஆபத்தானதும் கூட. ஆனால் அவை இவற்றை பொருட்படுத்தாமல் வருடாந்த இடம்பெயர்வை காட்டுகின்றது.

பறவைகளின் இடம்பெயர்வானது தான் இருக்கும் சுற்றுச்சூழல் வாழ்தகமை நிலைமை குறையும் போது குறைந்த இடத்தில் இருந்து கூடிய இடத்திற்கு பயணம் செய்கின்றது. அதாவது அவை உணவு , வாழிடம் , வானிலை என்பன தனக்கு சாதகமாக இருக்கும் இடங்களுக்கு இடம்பெயரவை காட்டுகின்றது.

குளிர்காலநிலை வலயங்களில் வாழும் பறவைகளில் சில கடுமையான குளிர்காலங்களில் இருந்து தப்பிக்க வெப்பமண்டல நாடுகளை நோக்கி பயணம் செய்கின்றன. ஒவ்வொரு பறவை இனங்களுக்கு ஏற்ப அவற்றின் இடம்பெயர்வு வருடத்தின் வெவ்வேறான பருவங்களில் இடம்பெறும்.

தினசரியான பறவைகள் இடம்பெயர்வு பற்றி இங்கு அறிந்து கொள்ள முடியும்.

கீழுள்ள வரைபடமானது பறவைகளின் இடம்பெயர் பாதைகளை காட்டுகின்றது. இவ்வாறான உலகின் முக்கியமான 8 பாதைகள் உள்ளன. இதில் இலங்கையானது மத்திய ஆசிய பறவைகள் பாதைக்கு உட்பட்டது. அதனால் இலங்கையானது அந்த வழி பாதை பறவைகளுக்கு இலக்கு அறியும் நாடாக காணப்படுகின்றது.

அதிகமான பறவைகள் தங்களது இடம்பெயர்விற்காக இரவில் பயணிக்கின்றன. இரவில் நீரோட்டம் மென்மையாக இருப்பதோடு நட்சத்திரங்களும் , நிலவும் திசை காட்டியாகவும் இருக்கின்றன. மற்றும் பறவைகள் காந்த்புலத்தை உணரக்கூடியவையாகவும் அதற்கு ஏற்ப பயணபாதையை கண்டறிந்து பயணிக்க கூடியவையாகவும் இருக்கின்றன. பறவைகள் தங்களது இடம்பெயர்வின் போது எப்போதும் கூட்டமாகவே செல்கின்றன, இவை உணவு பெற்றுகொள்ளுதல் மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு நன்மை பயக்கின்றன.

சைபரீயன் கொக்குகள் (Siberian cranes) , ப்ளேமிங்கொஸ் (Greater flamingos) என்பன இடம்பெயர் பறவைகளுக்கு சிறந்த உதாரணமாகும். இவை குளிர்காலத்தின் போது இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து செல்கின்றன. மேலும் blue-tailed bee-eater(நீலவால் பஞ்சுருட்டான்), barn swallow(தகைவிலாங் குருவி), Indian pitta,( இந்திய பொன்னுத் தொட்டான்), Indian paradise flycatcher(வேதிவால் குருவி ) and common redshank (புள்ளிச் செங்கால் உள்ளான் ) என்பன இலங்கையில் அதிகளவில் காணக்கூடிய இடம்பெயர் பறவைகளாகும்.

காலநிலை மாற்றம் பறவைகளின் இடம்பெயர்வை பாதிக்கின்றதா?

இன்றைய உலகின் பாரிய பிரச்சினையாக இருப்பது காலநிலை மாற்றமாகும். இன்னும் சில தசாப்தங்களில் இன்னும் மோசமடையும் சாத்தியகூறுகளை கொண்டுள்ளது. காட்டு விலங்குகள் , இடம்பெயர் பறவைகள் என்பன இதனால் அதிகமாக பாதிப்படைந்த குழுக்களாக காணப்படுகின்றன.

பறவைகளின் வாழ்க்கையானது பருவகால மாற்றங்களை அடிப்படையாக கொண்டது. அதிலும் இடம்பெயர் பறவைகள் பருவ கால மாற்றங்களுக்கு ஏற்ப வருடாந்த வாழ்க்கைமுறை அட்டவணையை கொண்டுள்ளன. இருப்பிடமுறை மட்டுமன்றி அவற்றின் உணவு , இனப்பெருக்கம் என அனைத்தும் பருவகால மாற்றங்களை அடிப்படையாக கொண்டே அமைகின்றன.

பறவைகளின் இடம்பெயர்வு மற்றும் பருவனிலை அட்டவணை பற்றி இங்கு மேலும் வாசிக்க முடியும்.

வெப்பனிலை மாறுபாடு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக ஒழுங்கற்ற பருவகால மாற்றங்கள் உண்டாகின்றன. இவற்றில் ஒரு மாற்றம் கூட இடம்பெயர்பறவைகளின் வாழ்க்கை வட்டத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த் கூடியவாறு அமைகின்றன. இது சில சமயங்களில் பறவைகள் காலனிலைக்கு ஏற்ப இசைவாக்கம் அடைய வழி வகுத்தாலும் பெரும்பாலும் அனேகமான இனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணமே அமைகின்றது. இவை பறவைகளின் இடம்பெயர்வு காலவரையறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உதாரணமாக வெப்பனிலை அதிகரிக்கும் போது வசந்தகாலம் (Spring) வருடத்தின் அதன் குறித்த காலத்திற்கு முன்பாகவே வந்துவிடும்.இதன் காரணமாக பறவைகள் முன்பே இடம்பெயர்வை ஆரம்பித்து விடுகின்றன.ஆனாலும் அவை சென்று அடையவேண்டிய இடத்தின் வெப்பனிலை , வானிலை என்பன அவைகளின் தேவைக்கு ஏற்றது போல் மாறியிருக்காது. அவைகளுக்கு தேவையான உணவுகள் , இருப்பிடம் போன்ற காரணிகள் அங்கு இருப்பது கேள்விக்குறியாகின்றது. இதன் காரணமாக பறவைகள் தங்களது வழமையான பாதைகளை மாற்ற ஆரம்பிப்பதோடு , பாதைகளின் தூரத்தையும் குறைக்க ஆரம்பிக்கின்றன. ஆனால் இவ்வாறான மாற்றம் அவ்விடம்பெயர் பறவைகளின் வாழ்க்கைமுறைக்கு உகந்ததல்ல. இதன் காரணமாகவே இடம்பெயர் பறவைகள் காலனிலை மாற்றம் காரணமாக அதிகளவில் பாதிக்கபடுவதாக கூறப்பட்டு வருகின்றது.

பறவைகள் பூகோள வெப்பமயமாதலில் கூட தங்களது வழமையான பாதையில் பயணம் செய்தாலும் , அவற்றின் சுற்றுசூழல் சமூகங்கள் முற்றிலும் மாறுபடுகின்றன.மற்றும் காலனிலை மாற்றமானது இரை, உணவு போட்டியாளர்கள் , ஒட்டுண்ணிகள் என்பவற்றின் எண்ணிக்கையையும் குறைக்கின்றன. இதன் காரணமாக அவை குறித்த சூழலுக்கு இசைவாக்கம் அடைய நீண்ட காலம் எடுக்கின்றன.

சில விஞ்ஞானிகள், இந்த பாதிப்புகளின் காரணமாக எதிர்காலத்தில் பறவைகள் இடம்பெயராமல் இருக்கும் ஆபத்தை எதிர்நோக்க போகின்றன என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

இடம்பெயர் முலையூட்டிகளின் ஓர்சீர்த்திட வெப்பநிலை

முலையூட்டிகளை விட பறவைகள் அதிக கலச்சேப விகிதத்தை கொண்டவையாகும்.

பொதுவாக பறவைகளின் சாதாரண உடல் வெப்பனிலையானது 380C – 440C வரையாகும். சில பறக்க முடியாத பறவைகளுக்கும்(தீக்கோழி) , நீர்வாழ் பறவைகளுக்கும் (பென்குயின்)இந்த வெப்பனிலை வீச்சானது குறைவாகும். ஓர்சீர்த்திட வெப்பனிலையில் உடலை பேணும் செயற்பாடு அனைத்து உயிரினங்களுக்கும் கிடைத்த அதிமுக்கியமான செயற்பாடொன்றாகும். இடம்பெயர் பறவைகள் மிக இறுக்கமான சக்தி சேமிப்பை கொண்டவை. இதன் காரணமாகவே நீண்ட தூரங்களுக்கு உணவின்றி அவற்றால் பறக்க முடிகின்றன.இந்த பறவைகள் குளிர் மற்றும் வெப்பம் காரணமாக இலக்கபடும் சக்தியை தவிர்க்க வேண்டிய பொறுப்பை கொண்டுள்ளன. இடம்பெயர்வின் போது இவை தேவையற்ற சக்தி இழப்புகளை தடுப்பதன் மூலமே நிலையாக நீண்ட தூரத்திற்கு அவற்றால் பறக்க முடியும். அத்தோடு இந்த பறவைகள் உடல் நீர் அளவை பேணும் செயற்பாடுகளும் நிலையாக இருப்பதை உறுதி செய்வது அவசியம். பாலைவனங்கள் , சமூத்திரங்கள் என்பவற்றை கடந்து நீண்ட தூரம் பயணிப்பதால் நீர் பற்றாக்குறையை பேணும் செயற்பாடு முக்கியம் பெறுகின்றது.

மேலும் இடம்பெயர்வுக்கு முன்னாக பறவைகள் தங்களது உணவு உட்கொள்ளும் விகித்தை அதிகரிப்பதுடன் , உடற்பருமனிலும் (pre-migratory fattening)அதிகரித்து காணப்படுகின்றன.

இடம்பெயர் பறவைகளின் ஓர்சீர்த்திடநிலை பற்றி இங்கு மேலும் அறிய முடியும்.

இலங்கையின் இடம்பெயர் பறவைகள்

இலங்கையானது உலகின் உயிர்பல்வகைமைக்கு முக்கியமான ஒரு புள்ளியாகும்.பறவைகளுக்கு வெப்பம்ண்டலமாகவும் , இயற்கை இருப்பிடமாகவும் திகழ்கின்றது.

“இலங்கையில் முதன்மையாக இரண்டு வகை இடம்பெயர்வு பறவைகள் இருக்கின்றன. ஒன்று கடற்கரையோர பறவைகள் அடுத்தது ஈரனில பறவைகள். காலனிலை மாற்றங்களின் காரணமாக இலங்கை சீரற்ற மழைவீழ்ச்சி பிரச்சினையை எதிர்கொள்கின்றது. உதாரணமாக இலங்கையின் ஆனவிழுந்தான ஈரனிலமானது வருடத்தின் ஒரு பகுதியில் வரண்டவையாகவும் இன்னும் ஒரு பகுதியில் அதிக மழைவீழ்ச்சி வெறுபவையாகவும் இருக்கின்றது. இதன் காரணமாக ஆனவிழுந்தானை ஈரனிலத்தை இலக்காக கொண்டு இடம்பெயர்ந்து வரும் பறவைகள் இருப்பிடங்களை இழக்க நேரிடுகின்றது. அத்தோடு பூகோள வெப்பமயமாதலின் காரணமாக கடல்மட்ட உயர்வானது அதிகரித்தமையின் விளைவு கரையோர இடம்பெயர்வு பறவைகளின் உணவு ,இருப்பிடம் என்பவற்றை கேள்விக்குறியாக்கியுள்ளது “ என Climate Fact Checksன் பேராசியரான W A D Mahaulpatha (senior lecturer at the Department of Zoology, the University of Sri Jayewardenepura,) அவர்கள் தெரிவித்தார்

காலனிலை மாற்றத்தின் ஆபத்தில் இருந்து இடம்பெயர் பறவைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும்

“சட்டத்தின் படி இடம்பெயர் பறவைகள் உட்பட அனைத்து உயிரனங்களையும் பாதுகாப்பது உரிமையாகும் (‘Flora and Fauna Protection Ordinance). மற்றும் எல்லைகளுக்கு இடையிலான பாதுகாப்பு முறைகளும் வழங்கபடுகின்றன (Bonn conversation)” என வனவிலங்கு பாதுகாப்புதுறையின் தலைவர் தாரக ப்ரசாத் அவர்கள் கூறுகின்றார்.

மேலும் அவர் கூறுகையில் , “ இலங்கையின் இடம்பெயர் பறவைகளை காலனிலை மாற்றம் பாதிக்கின்றது. பறவை இடம்பெயர்வு எப்போதும் தீவிர வானிலை நிலைகளிலிருந்து தப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் புவி வெப்பமடைதல் காரணமாக இடம்பெயர் பறவைகள் தங்கள் இடம்பெயர்வு முறையை மாற்றுகின்றன. சில நேரங்களில் அவை முன்பை போல நிறைய தூரங்கள் பறப்பதை தவிர்த்து குறைவான தூரங்களுடன் மட்டுபடுத்துகின்றன. இலங்கையில் அத்தகைய குறிப்ப்டுகின்ற அளவில் வேறுபாடுகள் இன்னும் ஏற்படவில்லை, ஏனெனில், புலம்பெயர்ந்த பறவைகளின் வருடாந்த எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் இலங்கையில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் காணப்படுவது இதற்கு காரணம் ,  “ எனவும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு தனிமனிதனும் இடம்பெயர் பறவைகள் பற்றியும், காலனிலை மாற்றத்திலிருந்து அவற்றுக்கான பாதுகாப்பு வழங்களையும் உறுதி செய்தல் இக்காலகட்டத்தில் அவசியமாகின்றது.

Gnana Prabu
Gnana Prabu
Articles: 10