Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
இந்த கட்டுரையின் மூலம் கீழ்வரும் விடயங்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள் :
நாம் அனைவரும் காடுகள் வாழ்வாதாரங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்பது பற்றிய அறிவை கொண்டு இருத்தல் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. UN-REDD அறிக்கையின் படி, காடுகள் உலகம் முழுவதும் 86 மில்லியன் பசுமைசார் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதுடன் , 1.6 பில்லியன் மக்கள் காடுகளை சார்ந்தும் இருக்கின்றனர்.
மேலதிகமாக காடுவாழ் இனங்கள் உணவு , மருந்து , சக்திவளங்கள் , பொழுதுப்போக்குகள் , மனித நல்வாழ்விற்கான உத்வேகங்கள் மற்றும் பங்களிப்பை வழங்குகின்றன.
உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐ.நா. மாநாட்டின் 15வது மாநாடானது, “Kunming-Montreal Global Biodiversity Framework” (GBF) திட்டத்தை ஏற்றுகொண்டுள்ளது. இதில் 2030ற்குள் அடையவேண்டிய 4 இலக்குகளையும் 23 அடைவு மட்டங்களையும் கொண்டுள்ளது. அதில் முக்கியமாக பழங்குடி மக்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் காலநிலை மாற்ற நெருக்கடிக்கு எதிரான நிலையான வன பல்வகைமைகளின் பயன்பாடு பற்றி அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
காட்டுவாழ் உயிரினங்களின் நிலையான நுகர்வு :
வனத்தாவரங்கள் அதிகளவில் உணவிற்காகவும் மருந்திற்காகவும் பயன்படுத்தபடுகின்றது. பல்வேறு வகையான காட்டு உணவுகளை குறிப்பிடலாம். உதாரணமாக மூலிகைகள் , பழங்கள் ,தேன் , இறைச்சி , மீன்கள் , காளான்கள் என்பன அதிலடங்கும். காட்டுதாவர உணவுகள் என்பது (WFPs) பயிரிடபட்ட வயல்கள்களுக்கு வெளியிலும் , வனப்பகுதிகள் , ஈரநிலங்கள் , ஆற்றங்கரைகள் போன்ற இடங்களிலும் மனித செயற்பாடின்றி சுயாதீனமாக வளரக்கூடிய தாவரங்களாகும்.
சில தாவர உணவுகள் நேரடியாக உண்ணுவதற்கு உகந்தவையாக இருந்த போதிலும் காளான்கள் சில கிழங்குவகைகள் என்பன நச்சுதன்மையை கொண்டவையாகவும் இருக்கின்றன. ஆனால் பாரம்பரிய மக்கள் உண்பதற்கு உகந்த உணவுகளையும் , மருந்துகளையும் பற்றிய சிறந்த அறிவை கொண்டவர்களாக இருந்தனர். அதனால் அவர்கள் நச்சுதன்மை மற்றும் உணவு ஒவ்வாமை பற்றி கவலைபட வாய்ப்பிருக்கவில்லை.
பழங்குடிமக்களிடம் காட்டு உணவுகள் தங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை வழங்கும் திறன் கொண்டவை என்று வலுவான நம்பிக்கை இருக்கின்றது. எங்களின் தேடலின் போது பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் “வனதாவர உணவுகள் விதிவிலக்கான போசனை கூறுகள் , விற்றமின்கள் , நார்சத்துகள், தாதுக்கள் , கொழுப்பமிலங்களின் மூலமாக இருக்கின்றது” என்பதை கூறுவதை பார்க்க முடிந்தது.
இத்தாவர உணவுகள் வழமையான உணவு முறைக்கு மாற்றீடாக அமைந்தாலும் அவற்றிலும் பலவகையான ருசிகரமான உணவு முறைகளும் இருக்கின்றன.அவ்வாறான உணவுமுறைகளை இலங்கையில் வேடுவ இனத்தவர்கள் (VADDAH) உட்பட பாரம்பரிய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உதாரணமாக சாலட் உணவுகள், உலர்ந்த அல்லது வறுத்த கிழங்குகள் , தேனில் பதபடுத்தபட்ட இறைச்சிகள் என்பன முதலிடத்தில் உள்ளன.
“காட்டு இறைச்சிகளான (Wild game meat) மான், மரை,மறிமான் என்பன அவற்றின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் இயற்கை உணவுகளால் மெலிந்த உடலமைப்பை கொண்டவையாக இருப்பதோடு, அவற்றின் இறைச்சிகள் சிவப்பு இறைச்சிகளை (Red Meat) விட நிறைவுற்ற கொழுப்புகள் குறைந்தவையாகவே இருக்கின்றன” என போசனை மற்றும் உடற்தகுதி நிபுணர் டொக்டர் மெலினா ஜம்போலிஸ் கூறுகின்றார்.
இவையனத்திற்க்கும் மேலாக வன உயிரினங்களின் மருத்துவ மதிப்பானது தற்காலத்தில் மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. உலகம் முழுவதும் சுமார் 50,000-70,000 தாவர வகைகள் நவீன மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்காக பயன்படுத்தபடுகின்றது.
வன உயிரனங்களுடன் நிலையான வாழ்வாதார நடைமுறைகளை ஏற்படுத்துதல் :
உலக சனத்தொகையில் ஐந்தில் ஒருவர் தங்கள் தங்கள் உணவு மற்றும் வருமானத்திற்காக காட்டுத்தாவரங்கள் , அல்காக்கள் மற்றும் பங்கசுகளை நம்பியுள்ளனர் எனவும், 2.4 பில்லியன் மக்கள் சமையல் எரிபொருள் தேவைக்கு தாவர விறகுகளை நம்பியுள்ளனர் எனவும் Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services (IPBES) 2022 இற்கான அறிக்கை தெரிவிக்கின்றது. ஆனால் அனைத்து செயற்பாடுகளும் காலநிலை மாற்றத்தால் இப்போது ஆபத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.எவ்வாறிருப்பினும், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் , சிறந்த நில முகாமைத்துவ செயற்பாடுகள் என்பன ஆபத்துகளை குறைப்பதற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்குகின்றன எனலாம்.
காடுகள் 86 மில்லியன் பசுமைசார் தொழில்வாய்ப்புகளை வழங்குகின்றன. இவை வன உயிரினங்கள் எந்தளவு மனித வாழ்வாதாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்த்துகின்றது. இயற்கைசார் தீர்வுகளை ஆதரிக்கும் அறிவை (adaptation knowledge) உள்ளூர் சமூகங்களிடம் பர்ப்புதல் முக்கியமான விடயமாக அமைந்துள்ளது. பழங்குடி மக்கள் , உள்ளூர் சமூகங்களுடன் வளர்ந்த நாடுகளும் அது பற்றிய அறிவை பகிர்ந்து கொள்வதும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்த்தாக அமைகின்றது. ஏனெனில், அவர்கள் தான் இயற்கைக்கு பாதகமற்ற வகையில் தங்களுக்கான துணிகள் மற்றும், நகைகள் மற்றும் பல உபகரணங்களை பெற்று கொள்கின்றனர்.
காடுவாழ் இனங்களின் முக்கியத்துவம் :
எத்தியோப்பியாவின் கிராமபுறங்களில் வாழும் மக்கள் வரட்சி, பஞ்சம் , மற்றும் சில அனர்த்த இடர்களின் போது உணவாக காடுவாழ் உண்ணக்கூடிய தாவரங்களையே அதிகமாக பயன்படுத்துகின்றனர் என NCBI அறிக்கை தெரிவிக்கின்றது. காட்டு தாவர உணவுகள் அதிக போசணையை கொண்டவையாகவே இருக்கின்றன். உதாரணமாக அதிகளவில் புரதம் , விற்றமின் B12, விற்றமின் C என்பவற்றை கூறலாம்.
காட்டு இனங்கள் இலகுவாக கிடைக்க கூடியதோடு, போசணை வாய்ந்தவையாகவும் இருப்பதால் அதை அண்டி வாழ்கின்ற சிறுவர்கள் சிறந்த போசனை பூர்த்தியை பெற்றுகொள்ள ஏதுவாக அமைகின்றது.மேலும் உணவு பற்றாக்குறையான காலங்களில் போசனை மிகுந்த மாற்றீடு உணவாகவும் அமைகின்றன்.
காடுவாழ் இனங்களை பயன்படுத்துவதன் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் :
வன உயிரினங்கள் நகரமயமாக்கல், விவசாய நிலங்களின் விரிவாக்கம் , அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்ற பல்வேறு மனித நடவடிக்கைகளால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து கொண்டு இருக்கின்றன. அத்தோடு காலநிலை மாற்றத்தால் வரட்சி , ஒழுங்கற்ற மழைவீழ்ச்சி போன்றவையும் தற்காலத்தில் மிகப்பெரிய சவால்களாக அமைந்துள்ளன.
இன்றைய சனத்தொகை அதிகரிப்பும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கின்றது. இன்று 8 பில்லியன் சனத்தொகையை அடைந்து விட்ட மனித சமூகம் உணவு தேவை மற்றும் இதர தேவைகளுக்காக அதிகளவில் காடுகளை உபயோகிக்கின்றனர்.
கடந்த சில தசாப்தங்களாக வெப்பநிலையானது நிலையான அதிகரிப்பை காட்டுகின்றது.. இது தாவர உயிர்பல்வகைமகளில் ஆக்கிரமிப்பு இனங்கள் வளர்வதற்கு ஏதுவாக அமைவதோடு , இதன் காரணமாக பலவீனமான பல்வகைமைகள் அதிக அழுத்ததிற்க்கும் முகங்கொடுக்க நேரிடுகின்றது.
பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் , சுவட்டு எரிபொருள் தகனம் , தொழிற்சாலை கழிவுகள், வளி மாசடைவு , மண் மாசடைவு போன்ற சூழல் மாசடைவுகளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
மேலும் விடங்களை அறிய எங்களது “ இலங்கையின் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களும் காலநிலை மாற்றத்தால் அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் “ எனும் கட்டுரையை பார்க்கவும்.
பாதுகாப்பு மற்றும் COP 15ன் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் :
சட்டவிரோதமான மற்றும் நிலையற்ற வர்த்தக எரிபொருட்கள் , உயிர்பல்வகைமை இழப்பு எச்சரிக்கை என்பன சுற்றுசூழல் மற்றும் அதை சார்ந்து வாழ்கின்ற தனிநபர் வரை அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது.
வேளாண் காடுவளர்ப்பு முறை (Agroforestry systems ) மூலம் காடுகளை விவசாயத்திற்காக அழிப்பதில் இருந்து குறைக்க முடியும். இதன் மூலம் காடுசார் உணவுகளையும் பெற்றுகொள்வதோடு காடுகளையும் பாதுகாக்க முடியும்.
அரசியல் ,சமூகம், பொருளாதரம் , கலாச்சார முக்கியத்துவங்கள் , மதம் சார் நம்பிக்கைகள் போன்ற காரணிகளும் வன உயிர்பல்வகைமை நுகர்வில் பங்குபெறுகின்றது எனலாம். ஆகவே இதை பற்றிய விழிப்புணர்வுகளை சமூகங்களிடையே பரப்புவது முக்கியத்துவம் பெறுகின்றது. இதைபற்றி இங்கு மேலும் வாசிக்க முடியும்.
COP 15 GBF ன் 4 இலக்குகளில் , மறுக்கப்பட்ட சூழல் அமைப்புகளை மறுசீரமைத்து தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக நிலையான அபிவிருத்திக்கு துணையாக நிற்றல் என்பதும் அடங்கும். ( GOAL B)
மூன்றாவது இலக்காக (GOAL C) மரபுரிமைகளுடன் சம்மந்தபட்ட பாரம்பரிய அறிவுகளை பழங்குடி மற்றும் உள்ளூர் சமூகங்கள் என அனைவருடனும் நியாயமாக பகிரப்படுவதோடு 2050ம் ஆண்டளவில் இது பற்றிய அறிவு அதிகரிக்கபடுவதோடு மரபணுக்களுடன் தொடர்புடைய அறிவானது சிறந்த முறையில் பாதுகாக்க படுவதாகவும் இருகின்றது.
இவற்றிலிருந்து COP 15 உயிர்பல்வகைமை மாநாடானது வன உயிர்பல்வகைமைகளின் பாதுகாப்பிற்க்கும் எதிர்கால நீடிப்புக்கும் சிறந்ததாக அமைந்த்துள்ளது எனலாம்.
சுருக்கமான சாராம்சம்
வன உயிர்பல்வகைமையானது உணவு , மருந்து , சக்திமுதல் , உபகரணங்கள் என மனித நல்வாழ்விற்கான அத்தியாவசியமான பல்வேறுபட்ட வளங்களை வழங்கி வருகின்றது. மக்கள் தொகையில் 5ல் 1 நபர் காட்டை சார்ந்து இருக்கின்றார் என்பதோடு உலகம் முழுவதும் 86 மில்லியன் தொழில் வாய்ப்புகளையும் அது வழங்கியுள்ளது. ஆனால் நகரமயமாக்கல் , அபிவிருத்தி நடவடிக்கைகள் , காலநிலை மாற்றம் , சூழல் மாசடைவு மற்றும் இன்னும் பல காரணிகளால் அவை சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்துள்ளன. நிலையான வாழ்வாதார முறைகள் , பழங்குடி மக்களுடனான தொடர்பு மற்றும் அறிவுசார் பகிர்வு என்பன வேகமாக முன்னெடுக்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.