Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

இந்தியாவில் அதிகரித்து வரும் காட்டுத்தீ நிகழ்வுகள்… நாம் கவனிக்க வேண்டியது என்ன?

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா முழுக்கவே காட்டுத் தீ சம்பவங்கள் அதிகளவு ஏற்பட்டுள்ளதாக, ஒரு வேதனை தரும் செய்தி வெளியாகியுள்ளது. ஆம், பிப்ரவரி மாதம் 13ம் தேதி தொடங்கி, 20ம் தேதி வரையான காலத்தில் மட்டும் இந்தியா முழுக்க சுமார் 1,156 காட்டுத் தீ நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, நாசாவின் Fire Information for Resource Management site (FIRMS) குறிப்பிடுகிறது. 

அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் பிப்ரவரி மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மட்டுமே, 95 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதுவே, 2022ம் ஆண்டின் இதே காலத்தில் 35 இடங்களில் மட்டுமே ஏற்பட்டிருந்தது. இது 100% உயர்வு என்று Forest Survey of India கூறுகிறது. இதற்கடுத்தப்படியாக, நீலகிரி வரையாடுகள் வாழும் ஆனைமலை அருகே உள்ள அக்காமலை புல்வெளிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ மிகப்பெரியதாகும். இது பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக நிகழ்ந்தது. 

கோடை காலம் தொடங்கும் முன்பே இந்தியாவில் இவ்வாறு காட்டுத் தீ ஏற்பட என்ன காரணம்?

காற்றில் குறைவான ஈரப்பதம், வளிமண்டலத்தில் அதிக வெப்பம் நிலவுவதே காட்டுத் தீ ஏற்பட காரணமாகிறது. இந்த ஆண்டில் இது அதிகரிக்கக் காரணம், இந்திய அளவில் பகல் பொழுதுகளில் சராசரி வெப்பநிலை இயல்பை விட, 5 முதல் 9 டிகிரி அளவுக்கு அதிகரித்துள்ளதே ஆகும். western disturbances எனப்படும் மேற்கத்திய காற்று சுழற்சிகள் போதுமான ஈரப்பதம் கொண்டு வரவில்லை; இதனால், வட மேற்கு இந்தியாவில் அனல் வீச தொடங்கியுள்ளது, என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)  தெரிவிக்கிறது.  

மார்ச் – ஏப்ரல் காலத்தில் லா நினா சரிவான நிலையில் உள்ளது; அதேபோல, எல் நினோ நடப்பாண்டு பிற்பகுதியில் வர உள்ளது. இவையும் வெப்பநிலையை கடுமையாக உயர்த்துவதோடு, அனல் காற்று வீச்சை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, 2024ம் ஆண்டில் எல் நினோ காரணமாக, 1.5°C அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சமீப காலமாக ஏற்பட்டு வரும் அனல் காற்று பாதிப்புகள் அனைத்தும், மனித இனம் ஏற்படுத்தியுள்ள சுற்றுச்சூழல் மாற்றத்தால் நிகழ்பவை என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.  

western disturbances எனப்படுபவை காற்றழுத்த மண்டலங்கள் ஆகும். சுருக்கமாகச் சொன்னால், புயல் காற்று தரக்கூடியவை. காஸ்பியன் கடல் பகுதியில் உருவாகி, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் வழியே பயணித்து வடமேற்கு இந்திய பகுதிகளுக்குத் தேவையான மழை தருபவை. 2023 பிப்ரவரி பொறுத்தவரை western disturbances பலகீனமாகவே இருந்தது. அதேசமயம், ஜம்மு காஷ்மீர் பகுதியில் இவை சற்று பலன் கொடுத்தாலும், உத்தரகாண்ட், ஹிமாச்சல் போன்ற மலைப்பிரதேசங்களில் சராசரி வெப்பநிலையை 5 – 7 டிகிரி அளவுக்கு அதிகரித்துள்ளன என்பதே உண்மை. 

காட்டுத் தீயால் ஏற்படும் விளைவுகள்

சுற்றுச்சூழல் மட்டுமன்றி பொருளாதாரத்திலும் இந்த காட்டுத் தீ குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆண்டுதோறும், இந்திய அளவில் 37.3 லட்சம் ஹெக்டேர் மதிப்புள்ள வனப்பகுதிகள் காட்டுத் தீயால் பாதிக்கப்படுகின்றன. வன விலங்குகள் உயிரிழப்பு, அரிய வகை தாவர இனங்கள் அழிவு, மதிப்பு மிகுந்த மரக்கட்டைகள் விளைச்சல் பாதிப்பு போன்றவை காட்டுத் தீ நமக்குத் தரும் பாதிப்புகளாகும். காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் வன உயிரினங்கள் பலியாவதால், பல்லுயிர் மண்டலத்தில் பெரும் இழப்பு ஏற்படுகிறது. 

காட்டுத் தீயின்போது வெளிவரும் புகை உலக வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் காரணிகளில் ஒன்றாக உள்ளது. இவ்வாறு தீ ஏற்படும்போது வனத்தின் அருகே வசிக்கும் மக்கள், வன விலங்குகள் இந்த புகை கலந்த காற்றை சுவாசிக்க நேரிடுகிறது. இதனால், அவர்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகள், இதய செயலிழப்பு போன்றவை ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் இப்படி நிகழும் காட்டுத் தீ காரணமாக, பல்லுயிர் மண்டலத்தில் புதைந்து கிடக்கும் கார்பன் போன்ற மதிப்பு மிகுந்த வளங்கள், காற்றோடு காற்றாகக் கலக்கிறது. இதனால், வனங்களில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய சரக்கு மற்றும் சேவைகள் குறைகிறது. 

பருவநிலை மாற்றம்: காட்டுத் தீ சம்பவங்களுக்கு ஒரு காரணம்

காடுகள், பருவநிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. ஏனெனில், அவை கடல்மட்ட உயரம், பல்வேறு காலநிலைகளுக்கு ஏற்ப – வெப்பமண்டல காடுகள், மிதவெப்ப மண்டல காடுகள், மழைக்காடுகள்,  பனிக்காடுகள் என பல ரகங்களில் வளரக்கூடியவை.  


காட்டுத் தீ பின்வரும் காரணங்களால் ஏற்படுகிறது:

  • வானிலை நிலவரம்
  • மனிதத் தவறுகள்
  • பருவநிலை மாற்றம்
  • எரிபொருட்கள் உபயோகம்
  • தீ தடுப்பு மேலாண்மை மற்றும், 
  • நில ஆக்கிரமிப்பு

இவற்றில், பருவநிலை மாற்றம் காட்டுத் தீ ஏற்பட முதன்மை காரணமாக உள்ளது. இது இரண்டு விதமாகக் காட்டுத் தீயை ஏற்படுத்துகிறது.

  1. முதலில், காற்றில் உள்ள ஈரப்பதத்தை குறைத்தல், வெப்பநிலையை அதிகரித்தல், அனல் காற்று வீசச் செய்தல் போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்துவதன் மூலமாக, காடுகளில் வறட்சி உண்டாகிறது. 
  2. இரண்டாவதாக, பருவநிலை மாற்றம் காரணமாக, ஒரு காட்டில் வளரும் தாவர இனங்களின் அடிப்படைக் கூறுகள், வளர்சிதை பண்புகளில் பெரிதும் மாற்றம் ஏற்படுத்துகிறது. இது, காட்டுத் தீ ஏற்பட வழிவகுக்கிறது

UNEP கூற்றின்படி, ‘பருவநிலை மாற்றம், நில சீர்திருத்தம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவே, காட்டுத் தீ அடிக்கடி ஏற்படுவதுடன், அதிக பாதிப்பை உண்டாக்கக்கூடியதாகவும் மாறியுள்ளது. 2030ம் ஆண்டில் உலக அளவில் காட்டுத் தீ ஏற்படுவது 14 சதவீத உயர்வுடன் இருக்கும் என்றும், இதுவே 2050ல் 30 சதவீதமாகவும், 2100ம் ஆண்டில் 50 சதவீதம் உயர்ந்தும் இருக்கும்,’ என்று மதிப்பிடப்படுகிறது. 


இந்தியாவைப் பொறுத்தவரை, சமீப ஆண்டுகளாகக் காட்டுத் தீ நிகழ்வுகள் மிக இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு முன்பு இருந்ததைவிடவும், கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுளளது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரகாண்ட், கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் காட்டுத் தீ ஏற்படுத்தும் பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது என்பதே யதார்த்தம். இதற்கு பருவநிலை மாற்றம் முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் காட்டுத் தீ ஏற்படுத்தியுள்ள தாக்கம்

இந்திய அளவில், ஆண்டுதோறும் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட வனப்பகுதிகள், காட்டுத் தீயால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக, உள்ளது. Forest inventory records சொல்வதன்படி பார்த்தால், இந்திய வனங்களில் 54.40% பரப்பளவு அவ்வப்போது, தீயால் பாதிக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான நிகழ்வுகள், மனிதத் தவறுகளாலேயே ஏற்படுகின்றன. இந்த மனிதத் தவறுகள் தெரிந்தோ அல்லது தெரியாமலேயே செய்யப்படுவதாகும். பைன் மரக் காடுகள், இலையுதிர் காடுகள் போன்றவைதான், இத்தகைய காட்டுத் தீ நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படும் வனப்பகுதிகளாக உள்ளன.

இமயமலை, வட கிழக்கிந்தியா, மத்திய இந்தியா போன்றவற்றில்தான் அதிகளவு காட்டுத் தீ நிகழ்கிறது. 


‘’வட கிழக்கிந்தியாவைப் பொறுத்தவரையிலும், மிசோரம், திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் போன்ற மாநிலங்களே காட்டுத் தீயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. 2020 நவம்பர் தொடங்கி 2021 நவம்பர் வரையான காலத்தில் மிசோரம், அசாம் ஆகிய மாநிலங்களே அதிக காட்டுத் தீ நிகழ்வுகள் ஏற்பட்ட இடங்களாக உள்ளன,’’ என்று CFC நிபுணர் டாக்டர். பார்த்தா தாஸ் குறிப்பிடுகிறார்.

‘’வட கிழக்கு மாநிலங்கள் பெரும்பாலும், காடுகள் அழிப்பு, நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றவை. இங்குள்ள வனங்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக அழிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தனிநபர்கள் அல்லது வர்த்தக நிறுவனங்களாலேயே முன்னெடுக்கப்படுகின்றன. தனிநபர்களை நாம் தடுக்க நேரிட்டாலும், வர்த்தகப் பணிகளுக்காக, காடுகள் அழிக்கப்படுவதை நம்மால் தடுக்க முடிவதில்லை என்பதுதான் கள நிலவரம்,’’ என்றும் அவர் தெரிவிக்கிறார்.

மேலும், ‘’வட கிழக்கு மாநிலங்களில் சில இடங்கள் ஆண்டு முழுக்கவும் மழை இன்றி வறண்டு கிடக்கின்றன. அங்கே மழை இல்லாததால்,வெப்பநிலை அதிகரித்து, வறண்ட வானிலையே நிலவுகிறது. இதனால், மரங்கள், இதர தாவர இனங்கள் போதிய நீரின்றி வறண்டு காணப்படுவதால், எளிதில் காட்டுத் தீ இங்கே ஏற்படுகிறது,’’.

‘’2020-21 கால கட்டத்தில் நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் அமைந்துள்ள Dzüko Valley சந்தித்த காட்டுத் தீ நிகழ்வை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. எந்த அளவுக்கு நாம் சுற்றுச்சூழலை சுரண்டியுள்ளோம் என்பதற்கும், பருவநிலை மாற்றம் எந்தளவுக்கு காடுகளை பாதிக்கிறது என்பதற்கும் இது நல்ல உதாரணம்,’’ என்றும் பார்த்தா தாஸ் கூறுகிறார். 

இந்தியாவில் காட்டுத் தீ நிகழ்வுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன?

கடந்த 2004ம் ஆண்டு முதலாக, இந்திய அளவில் ஏற்படும் காட்டுத் தீ நிகழ்வுகளை கண்காணிக்க, Forest Survey of India (FSI) பெரும் பங்களிப்பு வழங்கி வருகிறது. ஆம், செயற்கைக்கோள் அடிப்படையிலான தரவுகள் சேகரிக்கப்பட்டு, வனங்களை கண்காணிக்கும் பணிகளை FSI சிறப்பாக மேற்கொண்டுள்ளது. இதில் புதுப்புது தொழில்நுட்ப உதவிகள் பெறப்பட்டு, தற்போது முழு பலன் தரக்கூடிய Forest Fire Danger Rating System ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, வனங்களை பாதுகாக்கவே, 2019ம் ஆண்டு முதலாக, சம்பந்தப்பட்ட வனங்களின் அருகே கிடைக்கக்கூடிய real time SNPP-VIIRS data தரவுகள் அடிப்படையில் இயங்கும் Large Forest Fire Monitoring Programme ஒன்றும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

Real-Time monitoring மிகப்பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கவும், கண்காணிக்கவும் உதவுகிறது. இதனால், கிடைக்கும் உதவிகள் பின்வருமாறு:

  • காட்டுத் தீ ஏற்பட்ட பின், மீண்டும் அந்த பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதா, இல்லையா என்று அறிய முடிகிறது. 
  • காட்டுத் தீ ஏற்பட்ட பரப்பளவு, அது ஏற்படுத்திய சேதாரம் உள்ளிட்டவற்றையும் மதிப்பிட முடிகிறது. 

செயற்கைக்கோள் மூலமாக தகவல் சேகரிப்பு மையங்களுக்குக் கிடைக்கப் பெறும் தரவுகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட மாநில வனத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை மையமாகக் கொண்டு, அவர்கள் உடனடியாக, தீயை கட்டுப்படுத்தும் வியூகங்களை வகுத்துச் செயல்பட தொடங்குகிறார்கள். இதன்மூலமாக, காட்டுத் தீயை கட்டுப்படுத்தத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்ய முடிகிறது.

By Aayushi Sharma with inputs from Dr Partha Jyoti Das

Translated by: Parthiban S

Also, read this in English

Climate Fact Checks Team
Climate Fact Checks Team
Articles: 10