Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை 2023 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி செய்திக்குறிப்பின்படி, இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கீகரித்துள்ளது. இலங்கையானது கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார சிக்கலில் இருந்து வருகின்றது. சில கொள்கை தவறுகள் மற்றும் மாறுபட்ட பிரச்சினைகளால் நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம்.
2016 ஆம் ஆண்டு EFF திட்டத்தின் கீழ் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சி, 2018 இல் அரசியல் நெருக்கடி மற்றும் 2019 இல் பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற பல நிகழ்வுகள் நாட்டின் பாதிப்பை மோசமாக்கியது. 2019 ஆம் ஆண்டைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் நிலைத்திருக்க முடியாத கொள்கைகள் கணிசமான வரிக் குறைப்புக்கள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களின் தாமதங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டதன் காரணமாக இது பொருளாதாரத்திற்கு மேலும் அச்சுறுத்தல்களை அதிகரித்தது. அதனை தொடர்ந்து கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பிற்குப் பிறகு, நாடு நம்மால் மீட்க முடியாத அளவுக்கு பாதகமான நிலையை சந்தித்தது.
IMF நாட்டின் அறிக்கையின்படி குறிப்பிடப்பட்ட திட்டத்தின் நோக்கங்கள்-
Climate Fact Checks நிறுவனமானது கால நிலை மாற்ற பாதிப்பை குறைப்பதற்கான நிதி IMF ஆல் எவ்வாறு ஒதுக்கபட்டது என்பது பற்றி ஆராய்ந்தது.
காலநிலை மாற்றத் தழுவலை அரச நிதிக் கொள்கையில் ஒருங்கிணைத்தல்
IMF ஊழியர்களின் காலநிலை குறிப்பு 2022 நிதிக் கொள்கையில், காலநிலை மாற்றத்தை எவ்வாறு திட்டமிடுவது மற்றும் முக்கியமான விடயமாக மாற்றுவது என்பது பற்றிய ஆலோசனைகளும் அடங்கும். கால நிலை மாற்றத்திற்கான இசைவாக்கமானது, நிலையான அபிவிருத்திக்கும் , பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒன்றாகும். நிதிக்கொள்கையில் இருக்கும் முக்கியமான விடயங்களை வைத்து அதை எவ்வாறு திட்டமிடுவது என்பதே இப்போது இருக்கும் கேள்வியாகும்.
காலநிலை மாற்றத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு பொறிமுறைகளை அமைப்பது மற்றும் சட்ட அடிப்படைகளை வலுப்படுத்துவது போன்ற முன்நிபந்தனைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவை 4 கட்டமைப்புகளில் செயற்படுத்தபடவுள்ளது.
இலங்கையின் தற்போதைய கால நிலை இசைவாக்க நிகழ்வுகளை உற்று நோக்கும் போது அது மேலோட்டமாக ஒரு சில குழுக்களுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. உண்மையில் கால நிலை தழுவல் என்பது உள்ளூர் சிறு உடமையாளர்களுக்கு அதிகாரம் அளிப்பது, உணவு மற்றும் நீர் பாதுகாப்பை உறுதி செய்தல், பல்லுயிர் பாதுகாப்பு, நிலையான உயிரி ஆற்றல் உற்பத்தி மற்றும் அதிகரித்த பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆகியவையாக இருக்க வேண்டும்.இருப்பினும் பாதிக்கபடும் சமூகங்களுக்கான கவனம் நாட்டில் சரியாக இல்லை.
மேலும் IMF கொள்கை ஆனது, கால நிலை பாதிப்பால் ஏற்படும் பாதிப்புகளையும் அதற்கான இசைவாக்க நடவடிக்கைகளில் இருக்கும் பிரச்சினைகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தை கூறுகின்றது. இதில் கால நிலை பாதிப்பு தகவல்களை சேகரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல், இசைவாக்க நடவடிக்கைகளில் இருக்கும் பலவீனங்கள் , NAP செயல்முறை மற்றும் அதை செயல்படுத்துவதற்கான ஒரு வரைபடத்தை உருவாக்குதல்; மற்றும் தழுவலுக்கான நெறிமுறைக் கொள்கைகளின் வழிகாட்டுதலை நிறுவுதல் என்பன இதில் உள்ளடங்குகின்றது. மேலும், அடையாளம் காணப்பட்ட காலநிலை பாதிப்புகள் மற்றும் தேசிய வளர்ச்சித் திட்டங்களுடன் ஒத்துப்போகும் இசைவாக்க தேவைகளுக்கான சாத்தியமான தீர்வுகளை அடையாளம் காண்பது, இசைவாக்க விருப்பங்களின் செலவுகள் மற்றும் நன்மைகள் மற்றும் அவற்றின் விநியோக தாக்கங்களை மதிப்பிடுவது மற்றும் இந்தத் தீர்வுகளை பொதுமக்களுக்குத் தெரிவிப்பது ஆகியவை இதில் அடங்கும்.
இவற்றிற்கும் மேலாக, பொதுமக்கள் நிதி முகாமைத்துவத்தில் இசைவாக்க நடவடிக்கைகளை கொண்டு வருதல் பற்றி IMF கொள்கை மேலும் வலியுறுத்துகின்றது. அதாவது தேசிய வளர்ச்சித் திட்டங்கள், துறைசார் திட்டங்கள் மற்றும் உத்திகள், பேரிடர் இடர் மேலாண்மைத் திட்டங்கள், இடஞ்சார்ந்த திட்டமிடல், கட்டிட ஒழுங்குமுறைகள் மற்றும் நாட்டின் பிற செயல்பாடுகளில் உத்திகள் சேர்க்கப்பட வேண்டும் என்பதாகும். நாட்டின் பொருளாதாரத்தில் நிறைய முன்னேற்றம் ஏற்பட உள்ளது, இதன் காரணமாக சுற்றுச்சூழல் அல்லது காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. எவ்வாறாயினும், காலநிலை மாற்றம் என்பது எதிர்காலத்தில் பட்ஜெட் திட்டமிடலுக்கு வரும்போது கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கிய பகுதியாகும் என்பதை நாம் உணர வேண்டும். காலநிலை மாற்றத்தின் தாக்கங்களினால் பாதிக்கப்படக்கூடிய ஒரு நாடாக இலங்கை உள்ளது.