Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
கடந்த சில தசாப்தங்களாகவே யானை மற்றும் மனித மோதல்கள் படிப்படியாக தீவிரமடைந்து வருவது யாவரும் அறிந்த உண்மையே. இந்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளன.
யானை-மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றமும் பங்களித்துள்ளதா? இது குறித்து நமது குழு விசாரணை நடத்தியது.
யானைகள் தொடர்பான ஆராய்ச்சி நிபுணரும், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான வைத்தியர் பிரிதிவிராஜ் பெர்னாண்டோ மற்றும் இலங்கை பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வட்டத்தின் பணிப்பாளர் திரு.சுபுன் லஹிரு இவர்களிடையே இதுதொடர்பாக நாம் கருத்தினை பெற்றுக்கொண்டோம்.
மனிதனுக்கு எதிராக யானைகளின் எண்ணிக்கை பெருக்கம்
இலங்கையில் மக்கள் சனத்தொகை வேகமாக அதிகரித்து வருகின்றது. எனவே, பெரும்பாலான காடுகள் மற்றும் தரிசு நிலங்களை மானிடர்களின் நுகர்வுக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் நிலப்பரப்பில் 82% மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது மற்றும் யானைகளின் வரம்பு மொத்த நிலத்தில் 62% ஆகும். அதாவது இலங்கை பொறுத்தமட்டில் 44% நிலப்பரப்பு மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் பகிரப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பயனற்ற தன்மை
வைத்தியர் பிரிதிவிராஜ் பெர்னாண்டோ, அடர்ந்த காடுகள் நிறைந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து (PAs) யானைகளுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என்று தெரிவித்தார்.
ஆசிய யானைகளின் உணவு பெரும்பாலும் புல்வெளிகளையே சார்ந்துள்ளதால், இலங்கையில் உள்ள பல யானைகள் அடர்ந்த காடுகளை விட்டு வெளியேறி உணவு தேடி புல்வெளிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதன் காரணமாகவே யானைக்கும் மனிதனுக்கும் இடையே தொடர்பு ஏற்படுகிறது. ஒரு கருதுகோளாக, இலங்கையில் சுமார் 6,000 யானைகள் இருந்தால், அதில் 4,000 க்கும் மேற்பட்ட யானைகள் மக்கள் வாழும் பகுதிகளை நோக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வறட்சியின் தாக்கம்
குறிப்பாக, வறட்சிக் காலங்களில் உணவு கிடைப்பது சுலபமாக இருப்பதன் காரணமாக, கைவிடப்பட்ட நிலப்பரப்புக்கள், வயல்வெளிகள், புல்வெளிகள் அல்லது அறுவடை செய்யப்பட்ட நெல் பகுதிகளையே யானைகள் மிகவும் விரும்புகின்றன.
காலநிலை மாற்றத்தினால் யானைகளின் இறப்பு வீதம் சமீபத்திய அதிகரிப்புக்கு பங்களித்தது, ஏனெனில் நீடித்த வறட்சி தாவரங்களை கடுமையாக பாதித்துள்ளது. மேலும், அடிக்கடி வறட்சி நிலவும் காலங்களில், 19 மாவட்டங்கள் மற்றும் 131 பிரதேச செயலகங்களில் யானைக்கும், மனிதனுக்கும் இடையேயான முரண்பாடுகள் பதிவாகியுள்ளன.
சுபுன் லஹிரு பிரகாஷ் இது தொடர்பாக கூறுகையில், பொதுவாக வயது முதிர்ந்த ஆண் யானைகள் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று மோதல்கள் மற்றும் பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும், அதே சமயம் பெண் யானை மற்றும் யானை குட்டிகள் காடுகளில் வசிக்கும்.
இங்கே துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், அடர்ந்த காடுகளில் மட்டும் வாழும் யானைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறக்கும் அபாயமும் உள்ளதாக தெரிவித்தார்.
யானைகளின் உயிரிழப்பிற்கு திடீர் வெள்ள அனர்த்தங்களும் ஓர் காரணம்
பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் திடீர் வெள்ளத்தால் ஒவ்வொரு வருடமும் ஒன்று அல்லது இரண்டு யானைகளின் மரணம் நிகழ்வதாக திரு.சுபுன் தெரிவித்தார். மேலும் அவரின் ஆராய்ச்சியின் போது, சமீபத்திய யானை இறப்புகளுக்கு திடீர் வெள்ளம் தான் வலுவான காரணமாக அமைந்துள்ளதாக எமக்கு சுட்டிக் காட்டினார்.
ஆக்கிரமிப்பு அல்லது ஊடுருவும் தாவர இனங்கள், யானைகளின் வாழ்விடங்களை அழிக்கின்றனவா?
காலநிலை மாற்றம் தாவரங்களின் பரிணாமத்தை பாதிக்கிறது. அதன் மூலம் ஊடுருவும் தாவரங்கள் வளர அனுமதிக்கிறது. இதன் காரணமாக உண்ணிச் செடி (Lantana camara), Eupatorium odoratum போன்ற தாவரங்கள் லுனுகம்வெஹெர தேசிய பூங்காவில் ( Lunugamvehera National Park) பல பகுதிகளில் பரவியுள்ளதாக வைத்தியர் பிரிதிவிராஜ் எமக்கு தெரிவித்தார்.
தோராயமாக இந்த ஊடுருவும் தாவரங்கள் சுமார் 900 ஹெக்டேர் நிலப்பரப்பளவிற்கு பரவியுள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகளின் கூட்டமைப்பு (FEO) கணக்கிட்டுள்ளது.
மேலதிக தகவலுக்கு | Archived link
மேலும் சீமை கருவேலம் (Prosopis juliflora) தெற்கு மற்றம் பாதுகாக்கப்பட்ட அடர்ந்த காடுகளிலும் காணப்படுகின்றமையினால், இது விலங்குகளின் வளர்ச்சியை பாதிக்கின்றது. ஆக்கிரமிப்பு அல்லது ஊடுருவும் தாவர இனங்களின் பரவல் காரணமாக நீர் வற்றல் ஏற்பட்டு அங்கு வாழ்வதற்கான தரமும் குறைவதற்கு காரணமாக குறித்த தாவர இனங்கள் இருப்பதாக, வைத்தியர் பிரிதிவிராஜ் பெர்னாண்டோ தெரிவித்தார்.
முறையான திட்டமிடல் இன்றி நிறுவப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகள்
பருவநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒரு நல்ல தீர்வாக அமைந்துள்ளது. எனினும் அதற்கான ஆலைகளை உருவாக்குவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகள் (EIAs) மேற்கொள்ளப்பட்ட பிறகு, சுற்றுச்சூழலில் அமைந்துள்ள அமைப்புகளுக்கும் அத்தகைய சமூகத்தின் நலனுக்கு சேதங்கள் ஏற்படாத வண்ணமே இந்த வேலை செய்யப்பட வேண்டும். மேலதிக தகவலுக்கு
மொரகஹகந்த நீர்மின் திட்டத்தின் விளைவாக யானைகள் ஒன்று சேரும் இடங்கள் குறைவடைந்துள்ளமைக்கு மிகக் சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. இதன் தாக்கத்தை மின்னேரியா தேசிய பூங்காவே வலுவாக உணர்ந்துள்ளது மற்றும் மின்னேரியா ஏரியின் கரையில் உணவு உண்ணும் யானைகளின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கான குறைந்துள்ளதோடு, பல இறப்புகள் சமீபத்திய நாட்களில் பதிவாகியுள்ளன.
இதன் காரணமாக, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள யானைகள் மற்றும் யானைக்கும் மனிதனுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்துள்ளன.
முடிவுரை
இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, காலநிலை மாற்றத்தின் எதிர்மறையான விளைவுகளைத் தணிக்கும் திட்டங்களில் நிதி முதலீடு செய்ய முடியாது.
உணவுப் பற்றாக்குறையால், உள்ளூர்வாசிகள் பலர் பெரிய அளவில் பயிரிடப்படும் பயிர்களுக்காக காடுகளை அழிக்க திட்டமிட்டுள்ளனர். காடழிப்பு காலநிலை மாற்றத்தின் தீவிரத்திற்கு வழிவகுக்கிறது என்பதை நாம் புரிந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது எமக்கு உணர்த்துகின்றது.
2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில், 14,516 மனிதனுக்கும் யானைக்கும் இடையேயான மோதல்கள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 807 மனித உயிரிழப்புக்களும், 579 மனித காயங்கள், யானைகளால் 10,532 சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதோடு மற்றும் 2631 யானைகள் இறந்துள்ளது.
காலநிலை மாற்றம் யானை-மனித மோதலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் இந்த புள்ளிவிவரங்கள், முந்தைய பத்தாண்டுகளில் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. எனவே, காலநிலை மாற்றத்திற்கு பங்களிப்பு செய்யும் காரணிகளைக் குறைப்பதன் மூலம் இலங்கையில் நிலவுகின்ற யானைக்கும் மனிதனுக்கும் இடையேயான மோதல்களை குறைப்பதற்கு முடியும் என்பதை உணர முடிகின்றது.