Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
மனிதர்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி வேகமாக முன்னேறி சென்று கொண்டு இருக்கின்றனர். சனத்தொகை அதிகரிப்பானது இயற்கை வளங்களை மனிதர்களை கைபற்ற தூண்டுவதோடு அவற்றின் அழிவுக்கும் வழிவகுக்கின்றது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சில பிரச்சினைகளுக்கு மனித இனம் பல உயிரியல் தொழினுட்பத்தை பயன்படுத்துகின்றது. மரபு ரீதியாக மேம்படுத்த பட்ட உயிரினங்கள் (GMOs) அவ்வாறான ஒன்றே.
இந்தக் கட்டுரையின் மூலம், இரண்டு முக்கிய கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை ஆராய்கின்றோம்.
CLAIM 1 –
மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் பாதுகாப்பானவையாக இருப்பதோடு போசணைமிக்கவையாகும் உலகலாவிய உணவு நெருக்கடிக்கு தீர்வாகவும் அமைவதோடு மில்லியன் கணக்கான மக்களுக்கு இதன் மூலம் உணவளிக்கவும் முடியும்.
CLAIM 2-
மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் காலநிலை மாற்ற தாக்கத்தை குறைக்க உதவும்
மரபணு மாற்றியமைக்கபட்ட உயிரினங்கள் எனப்படுபவை யாவை ?
மரபணு மாற்றப்பட்ட உயிரினம் (GMO) என்பது ஒரு விலங்கு, தாவரம் அல்லது நுண்ணுயிரியின் DNA மரபணு பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றத்திற்கு உட்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் அங்கிகளாகும். இத்தொழினுட்பமானது உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி DNA யின் குறிப்பிட்ட இலக்கு மாற்றமானது, தேவையற்ற குணாதிசயங்களைக் குறியிடாமல் ஒரு உயிரினத்தின் மரபணு அமைப்பை மேம்படுத்த விஞ்ஞானிகளை அனுமதித்துள்ளது. மேலும் வாசிக்க.
இந்த தொழில்னுட்பமானது சில மரபணு மாற்றப்பட்ட பயிர்களுடன் தொடங்கியது, அவை வறட்சி அல்லது தீவிர வானிலை போன்ற காலநிலை மாற்ற தாக்கங்களுக்கு மிகவும் நெகிழக்கூடியதாக உருவாக்கப்பட்டன. உதாரணமாக , பயிர்களானது குறைந்த நீர் தேவைப்படும் அல்லது வெப்பமான, குளிர்ந்த வெப்பநிலையில் உயிர்வாழும் வகையில் வடிவமைக்கப்படலாம். இது உணவுப் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் உதவும் வண்ணம் விவசாயத்தில் பயன்படுத்தபடுகின்றது.
மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களுக்கு குறைந்தளவான நீரே தேவைபடுகின்றது
சில மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறைந்த நீர் தேவைப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை வறட்சி நிலைமைகளுக்கு அதிக மீள்தன்மை கொண்டவை. இந்த பயிர்கள் மிகவும் திறமையான நீர் பயன்பாட்டைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, அதாவது குறைந்த தண்ணீரில் அதிக விளைச்சலை பெற முடியும். நீர் வளங்கள் குறைவாக உள்ள அல்லது வானிலை நம்பகத்தன்மையற்ற பகுதிகளில் இது மிகவும் முக்கியமானதாக இருக்கும். பருவநிலை மாற்றத்தால் விவசாயத்தைத் தொடர முடியாமல் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படும் நாடுகளுக்கும் இது மிகவும் பயனளிக்கிறது.
மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் ஆவியுயீர்ப்பை கட்டுபடுத்துகின்றது
மற்றொரு அம்சம் என்னவென்றால், சில மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இலைக்கண் (Stomata) எனப்படும் இலைகளில் உள்ள சிறிய துளைகளைத் திறந்து மூடுவதைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இலைகளில் இருந்து ஆவியீர்ப்பின் காரணமாக நீர் இழக்கப்படுவது கட்டுபடுத்தபடுகின்றது. மேலும் வாசிக்க.
மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் ஆழமான மண்ணிலிருந்து தண்ணீரை பெற்றுகொள்கின்றது
மேலும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் ஆழமான மற்றும் விரிவான வேர் அமைப்புகளைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை வறட்சி காலங்களில் ஆழமான மண்ணிலிருந்து ஈரப்பதத்தை பெற்றுகொள்ள அனுமதிக்கிறது. இது தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் பயிர்கள் உயிர்வாழவும் தொடர்ந்து வளரவும் உதவுகின்றது.
நீர் தேவையை பூர்த்தி செய்யாத காரணத்தால் விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். விவசாயத்திற்கு உகந்த வானிலையானது காலநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நேரடியாக பாதிக்கிறது. வானிலை மாற்றங்கள் முக்கியமாக தாவரத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றன. நீடித்த வறட்சி ஆரோக்கியமான தாவரங்களின் பராமரிப்புக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது. மேம்படுத்தப்பட்ட வறட்சி சகிப்புத்தன்மை கொண்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், உணவு நெருக்கடி உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் சவால்களை சமாளிக்க விவசாயிகளுக்கும் சமூகங்களுக்கும் உதவும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
FACT 1
உலக சனத்தொகையானது 8 பில்லியனை தாண்டி சென்று கொண்டு இருக்கின்றது. இது பூமியின் தாங்குதிறன் அளவை விட அதிகமாகும். மக்கள்தொகைக்கு உணவளிக்க GMO களை வளர்க்க நாம் தேர்வுசெய்தால், ஊட்டச்சத்து மதிப்பு, உடல் மற்றும் மனநலம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவது அவசியம். அவற்றின் பாதகமான விளைவுகளின் மதிப்பீடுகள் இன்னும் சோதனை நிலையில் உள்ளன. எனவே, GMO தான் உலகின் உணவு நெருக்கடிகளுக்கு தீர்வு என்று சொல்ல முடியாது. இருப்பினும், இந்தப் பயிர்களின் சாத்தியமான அபாயங்கள் மற்றும் நன்மைகள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் மீதான அவற்றின் தாக்கத்தை கவனமாக மதிப்பீடு செய்வது முக்கியமானதொன்றாக அமைந்துள்ளது எனலாம்.
மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களைப் பற்றி எப்போதும் விவாதங்கள் உள்ளன. எங்கள் பகுப்பாய்வின் மூலம், பல ட்வீட்கள், வலைப்பதிவு இடுகைகள், சமூக ஊடக பக்கங்கள் மற்றும் வலைத் தளங்கள் குறிப்பிடுவதைக் கண்டோம், தீவிர விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் GMO க்கள் உண்மையில் காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கக்கூடும்.
FACT 2 – உண்மையில் இந்த மரபணு மாற்றபட்ட தாவரங்கள் காலநிலை தாக்க பாதிப்பை தணிக்க உதவுமா?
GMO ஆனது காலநிலை மாற்றத்திற்குப் பங்களிக்கிறது என்று பெரும்பான்மையினர் வாதிடுகின்றனர். இந்த நடைமுறைகள் காடழிப்பு, மண் சிதைவு மற்றும் பல்லுயிர் இழப்புக்கு வழிவகுக்கும், இது இறுதியில் சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் காலநிலை மாற்றத்தை அதிகரிக்கிறது. என அவர்கள் வாதிடுகின்றனர்.
மேலும், GMO பயிர்களை GMO அல்லாத பயிர்கள் அல்லது காட்டு தாவரங்களுடன் கலப்பினம் செய்யும் போது திட்டமிடப்படாத மரபணு மாற்றங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளதும் குறிப்பிடதக்கதாகும்.
ஒட்டுமொத்தமாக, GMO களுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையிலான உறவு சிக்கலானது மற்றும் பன்முகத்தன்மை கொண்டது. GMO க்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சில சவால்களை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டிருந்தாலும், அவற்றின் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் எதிர்பாராத விளைவுகளைக் கவனமாகக் கருத்தில் கொள்வது அவசியம்.
GMO monoculture ஆனது காலநிலை மாற்றத்தில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒற்றை வளர்ப்பு (Monoculture) என்பது ஒரு பெரிய பரப்பளவில் ஒரு பயிரை வளர்க்கும் நடைமுறையைக் குறிக்கிறது, இது பெரும்பாலும் தொழில்துறை விவசாயத்தில் செயல்திறனை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த நடைமுறை சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதோடு பல வழிகளில் காலநிலை மாற்றத்திற்கு பங்களிப்பும் செய்யக்கூடியது.
ஆண்டுதோறும் ஒரே பகுதியில் ஒரே பயிரை வளர்ப்பது மண் சிதைவுக்கு வழிவகுக்கின்றது. இதனால் மண்ணின் போசணை மற்றும் கரிமப் பொருட்கள் குறைந்துவிடும். இது மண் வளத்தை குறைப்பதோடு, மண் அரிப்பை அதிகரிக்கும்.மேலும் இந்த செயன்முறை மண்ணில் சேமிக்கப்படும் கார்பனை வளிமண்டலத்தில் வெளியிடவும் செய்கின்றது.
விளைச்சலைத் தக்கவைக்க உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அதிகப் பயன்பாட்டை பெரும்பாலும் ஒற்றைப் பயிர்ச்செய்கை நம்பியுள்ளது. இந்த இரசாயனங்கள் பச்சைவீட்டு வாயு உமிழ்வு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கின்றது.
காடழிப்பு என்பது ஒற்றைப் பயிர்ச்செய்கையிலும் நிகழ்கிறது, ஏனெனில் இதற்கு பெரும்பாலும் பெரிய நிலப்பரப்பு தேவைப்படுகிறது. வெட்டபட்ட மரங்களில் சேமிக்கப்பட்ட கார்பனை வளிமண்டலத்தில் வெளியிடுவதன் மூலம் இது காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது. ஒரே வளர்ப்பு பல்லுயிர் இழப்புக்கும் வழிவகுக்கிறது. இது மகரந்தச் சேர்க்கை போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.
GMOs களின் ஏனைய பாதகமான விளைவுகள்
GMO அல்லாத பயிர்களின் மரபணு மாசுபாடு பல எதிர்மறையான சுற்றுச்சூழல் தாக்கங்களை ஏற்படுத்தும். மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் (GMO கள்) மரபணுக்கள் GMO அல்லாத பயிர்கள் அல்லது காட்டு தாவரங்களுடன் கலப்பினம் செய்யும் போது மரபணு மாசுபாடு ஏற்படுகிறது, இது திட்டமிடப்படாத மரபணு மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. இது அவற்றின் நெகிழ்ச்சி மற்றும் மாறிவரும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் தன்மையைக் குறைக்கும். குறிப்பாக பாரம்பரிய ரகங்களை நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு இது சிக்கலாக இருக்கும். இதன் காரணமாக இது பாரம்பரிய பயிர் வகைகளின் அழிவுக்கும் வழிவகுக்கும்.
சாராம்சம்
GMO க்கள் விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் அவற்றின் திறன் மூலம் காலநிலை மாற்றத்தைத் தணிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளன. GMO அல்லாத பயிர்களின் மரபணு மாசுபாட்டின் சுற்றுச்சூழல் பாதிப்புகள், GMO பயிர்கள் முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்வது இங்கு அவசியமாகின்றது. மரபணு மாசுபாட்டுடன் தொடர்புடைய அபாயங்கள் சரியாக மதிப்பிடப்பட்டு குறைக்கப்பட வேண்டும். அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய சாத்தியமான அபாயங்கள் மற்றும் திட்டமிடப்படாத விளைவுகளை கவனமாக மதிப்பீடு செய்வது முக்கியமாகும்.