Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Translated By: Parthiban S
ஸ்பானிஷ் மொழியில் ‘எல் நினோ’ என்றால், சிறு குழந்தை அல்லது கிறிஸ்து குழந்தை என அர்த்தம். NOAA கூற்றின்படி, கி.பி., 1600ம் ஆண்டுகளில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்ட சூடான நீரோட்டத்தை உணர்ந்த தென்னமெரிக்க மீனவர்கள், இந்த பெயரை சூட்டியதாக, தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் எல் நினோ உச்சக்கட்டத்தை எட்டும் என்பதால், ‘El Nino de Navidad’ என்றே அவர்கள் அழைத்துள்ளனர். அதுவே எல் நினோ என்று காலப்போக்கில் நிலைத்துவிட்டது.
நேஷனல் ஜியோகிராஃபிக் இணையதளம், ‘’பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மண்டலத்தின் நீரோட்டம் முழுவதையும் வெப்பமாக மாற்றும் பருவநிலை மாற்றத்திற்கு, எல் நினோ என்று பெயர். இன்னும் சொன்னால், El Niño-Southern Oscillation (ENSO) என்ற மிகப்பெரிய நிகழ்வின், ஒரு ‘’சூடான அங்கம்’’ இந்த எல் நினோ,’’ என்று தெரிவிக்கிறது.
பசிபிக் பெருங்கடலின் மத்திய பகுதியில் ஏற்படும் காற்றழுத்தம் மற்றும் கடல்மட்ட வெப்பநிலை (SST) மாற்றம் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட கால அளவில் உண்டாகும் ஏற்ற இறக்க நிலை இருமடங்காக பெருங்கடல்-வளிமண்டலத்தை பாதிக்கிறது. இதுவே, ENSO (El Niño and the Southern Oscillation) என கூறப்படுகிறது.
ENSO மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது. (i) கடல்மட்ட வெப்பநிலை (SST) இருமடங்காக உயர்வதால், பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு மண்டல நீரோட்டத்தை சூடாக மாற்றும் நிகழ்வுதான் எல் நினோ. இது ENSO-ன் சூடான நிலை. (ii) இதுவே, லா-நினா என்பது, ENSO-ன் குளிர்ச்சியான நிலை. கடல்மட்ட வெப்பநிலை (SST) இயல்பைவிட குறைவதால், பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு மண்டல நீரோட்டம் குளிர்ச்சியடைவதால் இது ஏற்படுகிறது. (iii) சமநிலை: பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டல பகுதி நீரோட்டம், எந்த தாக்கமும் இன்றி சமநிலையில் காணப்படுவதாகும். ஏனெனில், அப்பகுதியில் கடல்மட்ட வெப்பநிலை (SST) இயல்பு நிலையில் இருக்கும்.
ENSO நிகழ்வு கிட்டத்தட்ட 2 முதல் 7 ஆண்டுகள் வரை நிகழக்கூடியதாகும். இதில், அவ்வப்போது எல் நினோ மற்றும் லா நினா பெருங்கடலின் வெப்பநிலையை உயர்த்தியும் குளிர்வடைய செய்தும் வளிமண்டல அழுத்தத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன. இதனால், அந்த பகுதியில் காற்றோட்டம் மற்றும் மழைப்பொழிவில் சீரற்ற நிலை ஏற்படுகிறது. இதன்மூலமாக, உலக அளவல் பருவநிலை மற்றும் வெப்பநிலை என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், உலகின் பருவநிலை சுழற்சியில் ஆதிக்கம் செலுத்துவதால், ENSO கிட்டத்தட்ட மனித குலத்தின் சுற்றுச்சூழல், ஆதாரம் மற்றும் சமூக பொருளாதார கட்டமைப்புகள் என அனைத்திலும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
உலக வெப்பநிலையில் தாக்கம்
ENSO உலக வெப்பநிலையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இவ்வாறு பதவு செய்யப்பட்ட காற்றின் வெப்பநிலையை பொறுத்து, அதிக வெப்பம் நிலவிய ஆண்டுகளை நேரடியாக எல் நினோ உடனும், குறைந்த வெப்பநிலை பதிவான ஆண்டுகளை லா நினா உடனும் நேரடியாகவே தொடபுர்படுத்த முடிகிறது. 1880 முதல் 2022 வரை (கிட்டத்தட்ட 143 ஆண்டுகள்) இவ்வாறு உலகின் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமான வெப்பம் நிலவிய ஆண்டாக, 2016 அறியப்படுகிறது. அதேசமயம், 1850 முதல் 1900 வரையான நீண்ட காலத்தில் சர்வதேச சராசரி வெப்பநிலை 1°C மட்டுமே அதிகரித்திருந்தது.
பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு
Nature இதழில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், 2030ம் ஆண்டின்போது லா நினா, எல் நினோ ஆகிய வானிலை மாற்றங்களில் பருவநிலை மாற்றமும் கணிசமான தாக்கம் ஏற்படுத்துவதாக உள்ளதென்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்பே கணிக்கப்பட்ட கால அளவைவிட கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் முன்கூட்டியே நிகழவிருக்கும் மாற்றமாகும். இதற்கு, உலக பருவநிலை மாற்றத்தில் ENSO ஏற்படுத்தி வரும் தாக்கமும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா பற்றி…
இந்தியாவில், 2016ம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக அறியப்படுகிறது. 1981 முதல் 2010 வரையான காலத்துடன் ஒப்பிடுகையில் இது 0.71°C உயர்வாகும். இதற்கு, 2015-2016 காலக்கட்டத்தில் எல் நினோ ஏற்படுத்திய தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததே காரணம்.
இந்திய கோடைகால பருவமழைப் பொழிவில் ஏற்பட்ட மாற்றத்திற்கும், ENSOக்கும் நேரடி தொடர்பு உள்ளதற்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் உள்ளது. எனினும், இதுபோன்ற காற்று மண்டலத்தில் நிலவும் தொலைத்தொடர்பான நிகழ்வுகள் செயல்படும் விதம் பற்றி நாம் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எல் நினோவைப் பொறுத்தவரை, இந்திய துணைக்கண்டத்தில் பலமுறை குறைவான பருவமழை, வறட்சிகள், அனல் காற்றுகள் மற்றும் உணவு தட்டுப்பாடு போன்றவற்றை ஏற்படுத்தியிருக்கிறது. மறு புறம், லா நினா காரணமாக, அதிக மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் உறையவைக்கும் குளிர் போன்றவை தெற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ளன.
1877, 1887, 1899, 1911, 1914, 1918, 1953, 1972, மற்றும் 1976 போன்ற ஆண்டுகளில், இந்திய அளவில் கடும் வறட்சி ஏற்பட்டதற்கு, எல் நினோவே காரணம். இதேபோல, சமீப காலத்தில் 1987, 2002 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் பதிவான மிகப்பெரும் வறட்சிகளுக்கும் எல் நினோவே காரணமாகும்.
இதேபோன்று, வடக்கு, வடகிழக்கு இந்திய பகுதிகளில், 1988, 1998, 2000, 2008, மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட அதீத மழை, வெள்ளப்பெருக்கு, கடுங்குளிர் உள்ளிட்டவற்றுக்கு லா நினா காரணமாகச் சொல்லப்படுகிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற தென்னிந்திய பெருநகரங்களில் ஆண்டுதோறும் ஏற்படும் கனமழை, வெள்ளப்பெருக்கு போன்றவையும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய நிகழ்வுகளாகும்.
எல் நினோ 2023-24
கடந்த 2020 செப்டம்பர் தொடங்கி இதுவரை கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக, உலகம் முழுவதுமே லா நினாவின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதுவரை ஏற்பட்ட லா நினாக்களில் தற்போதைய லா நினா மிக நீண்டதாகக் கருதப்படுகிறது. மும்மடங்கு குளிர்ச்சியை உலக அளவில் இந்த முறை லா நினா ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2023 பிப்ரவரிக்குப் பிறகு, லா நினா படிப்படியாக தாக்கம் குறைந்து, தனது கட்டுப்பாட்டை இழக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு தெரிவிக்கின்றனர். 2023 பிப்ரவரிக்கு பின்னர் லா நினா படிப்படியாக விலகி, ENSO சுழற்சி சமநிலைக்கு வரும் என்றும் தெரிவிக்கின்றனர்.
2023ன் பிற்பகுதியில், ENSO சுழற்சி சமநிலையை அடைந்த பின், படிப்படியாக, எல் நினோ உருவாகி, வெப்பநிலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, எல் நினோவைப் பொறுத்தரை டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்களில்தான் உருவாகும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக, 2024ம் ஆண்டு முழுக்கவே எல் நினோவின் ஆதிக்கம் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இதன்மூலமாக, 2023ம் ஆண்டு சற்று வெப்பமாக இருந்தாலும், 2024ம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என்பது தெளிவாகிறது. இவ்விரு ஆண்டுகளிலும் உலகின் சராசரி வெப்பநிலை 1.5°C அல்லது அதற்கும் மேலே அதிகரிக்கலாம் என்று ஏற்கனவே, பாரீஸ் உடன்படிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதைவிடவும் கடுமையான வறட்சி, வெப்பம் மிகுந்த ஆண்டுகளாக அடுத்த 2 ஆண்டுகள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்திய வானிலை ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் எம்.மோகபத்ரா ஹிந்துஸ்தான் டைம்ஸ் அளித்த பேட்டியில், ‘’இன்னும் சில மாதங்கள் காத்திருந்தால் நமக்கு மிகத் தெளிவான மதிப்பீடு கிடைக்கும். தற்போதைய சூழலில், கவலைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நாம் குளிர்காலம் முடிவடைந்து, ENSO-neutral நிலையை சந்திக்கப் போகிறோம். அதன்பிறகுதான், எல் நினோ பற்றி பேச வேண்டிய தேவை ஏற்படும்,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
2023ம் ஆண்டை பொறுத்தவரை, இந்தியாவின் பணவீக்கத்தை பாதிக்கும் விசயமாக எல் நினோ இருக்கும். ஏனெனில், நாட்டின் வேளாண்துறை மிகவும் பாதிக்கப்படப் போகிறது. வறட்சி அதிகரிக்கும் பட்சத்தில் வேளாண் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் குறைந்து, உணவுப் பொருட்களின் விலை உயரவும் வாய்ப்புள்ளது.
(Manjori Borkotoky with Inputs from Dr. Partha Jyoti Das)
Also, read this in English