Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
2015-ல் உலக வெப்பமயமாதலை குறைப்பது பற்றிய பாரீஸ் உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது முதலாக, அரசுத் துறை சாராத கார்ப்பரேட் மற்றும் நிதித்துறையினர், அதேபோல, உள்ளூர் அரசமைப்புகள், பிராந்திய அரசுகள் கூட Net-Zero அளவை பாதுகாப்பது என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வது அதிகரித்துள்ளது. உலகம் முழுக்க இதற்கென பலதரப்பட்ட தர அளவுகள், மதிப்பீடுகளையும் நிர்ணயிக்க தொடங்கியுள்ளனர்.
‘வரும் 2050-ம் ஆண்டிற்குள் Net Zero Emissions அதாவது வாகன இயக்கம், தொழிற்சாலைகள், வீட்டுப் பயன்பாடு இப்படி பல்வேறு வழிகளின் மூலமாக சுற்றுச்சூழலில் கலக்கும் மாசுக்களின் அளவை சுழிய நிலைக்கு கொண்டுவர வேண்டும்,’ என ஒருசாரார் பேசி வருகின்றனர். இதன்காரணமாகவே, தற்போது “greenwashing,” பற்றி பலரும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஆனால், மறுபுறம் இப்படி பேசுவோரே தங்களது தேவைக்காக நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தித் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் செய்கின்றனர்.
அரசு சாராத நபர்கள் Net Zero Emissions தொடர்பான ஒப்பந்தங்களை பின்பற்றுகிறார்களா இல்லையா என்பதை கண்காணிக்க, ஒரு உயர்-மட்ட நிபுணர்கள் குழுவை ஐ.நா., சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கடந்த மார்ச் 31, 2022 அன்று ஏற்படுத்தியுள்ளார். அரசு சாராத தனிநபர்கள், நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், நகராட்சிகள், பிராந்திய அமைப்புகள் உள்ளிட்ட பலரும் Net Zero Emissions பற்றி தாங்கள் செய்துகொடுத்த உறுதிமொழியை பின்பற்றுவதை இந்த குழு தீவிரமாகக் கண்காணித்து உறுதி செய்யும்.
Net-Zero Greenwashing
எகிப்தில் உள்ள Sharm el-Sheikh நகரில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில் (COP27 ) நவம்பர் 8, 2022 அன்று பொதுச் செயலாளர் குட்டெரஸ் மேலே குறிப்பிட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிட்டார். அப்போது, அவர் கூறுகையில், ‘’அரசு இயந்திரங்கள் மட்டுமின்றி ஏராளமான நிறுவனங்களும் கார்பன்-இல்லாத உலகை படைப்போம் என்று சபதம் எடுக்க தொடங்கியுள்ளன. இது மிகவும் நல்ல செய்தி. இத்தகைய விசயங்களை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவெனில், நாம் உறுதிமொழி ஏற்க மட்டுமே செய்கிறோம்; ஆனால், ஒரு சிறிய டீசல் லாரியை ஓட்டுவதன் மூலமாகக் கூட இந்த உறுதிமொழி சாத்தியமற்றதாக மாறிவிடும் அபாயம் உள்ளதை நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம்,’’ என்றும் குறிப்பிட்டார்.
‘’நடைமுறையில் எப்படி இருந்தாலும், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைக்கு நண்பனாக இருப்பதைப் போல, நிறுவனங்கள் அல்லது பிராந்திய, உள்ளூர் ஆட்சியமைப்புகள் தங்களை காட்டிக் கொள்வதையே Greenwashing என்று அழைக்கிறோம். அதேபோல, எந்த சுற்றுச்சூழல் இலக்குமே இன்றி Net-Zero என்று தங்களை கூறிக் கொண்டு, கூடுதலாக நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தித் திட்டங்களை சிலர் நடைமுறைப்படுத்த விரும்புவது நகை முரணாக உள்ளது,’’ என்றும் அவர் தெரிவித்தார்.
நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள்
‘’புதியதாக, புதை படிம எரிபொருள் உற்பத்தித் திட்டங்களில் முதலீடு அல்லது கட்டமைப்பு செய்வதில் அரசு சாராத அமைப்புகள் ஈடுபட்டுக் கொண்டு, மறுபுறம் Net Zero என்று தங்களை அழைத்துக் கொள்கின்றன. நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திப் பணிகள்தான் உலக அளவில் ஒட்டுமொத்த பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றுவதில், 75% பங்களிப்பை கொண்டுள்ளன. புதை படிம எரிபொருட்கள் உற்பத்தியை தொடர்ந்து செய்தபடி, மறுபுறம் Net Zero பற்றி பேசுவது ஒட்டுமொத்தமாக ஏற்புடையதல்ல. அதேபோல, காடுகளை அழிப்பது மற்றும் சுற்றுச்சூழலை சீரழிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது கிட்டத்தட்ட அரசு சாராத அமைப்புகள் Net-Zero Emissions தொடர்பாக நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்ட ஒருபோதும் உதவாது,’’ என்று நிபுணர்கள் குழு கூறுகிறது.
‘’அரசு சாராத அமைப்புகள் (தொழிற்சாலைகள் உள்ளிட்டோர்) தாங்கள் வெளியிடும் கார்பன் அளவை குறைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தாமல், அதன் அளவை மற்றவர்களுக்கு குறைத்துக் காட்டுவதில்தான் கவனம் செலுத்துகின்றன. இது முற்றிலும் தவறான தாக்கத்தை சுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் என்பதை அவர்கள் கவனிக்க தவறுகின்றனர்,’’ என்று அந்த நிபுணர்கள் குழு குறிப்பிடுகிறது.
அடுத்தப்படியாக, அரசாங்கங்கள் நிர்ணயிக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான கொள்கை வகுப்புகளில் அரசு சாராத நபர்கள் நேரடியாக அல்லது வர்த்தக சங்கங்கள் அல்லது இதர கூட்டமைப்புகள் மூலமாக தலையீடு செய்வதையும், இந்த நிபுணர்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். இதில், மூலதன முதலீட்டுச் செலவை திட்டமிடுவதில் தொடங்கி சுற்றுச்சூழலை பாதுகாப்பது வரை அரசு நிர்ணயிக்கும் இலக்குகளையும் உள்ளடக்க வேண்டியள்ளதாக, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு இந்திய நிறுவனம் மட்டும் இந்த நெட் ஜீரோ இலக்கை எட்டி முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது
CFC Indiaக்கு எழுதிய இமெயில் ஒன்றில், வருண் அகர்வால், சீனியர் புரொஜெக்ட் அசோஷியேட் – கிளைமேட் புரோகிராம் – World Resources Institute, இந்தியா, ‘’அறிவியல் உதவியுடன் கூடிய தொழில்நுட்ப வசதிகள் அனைவருக்கும் சாத்தியப்படும் வகையில் இருந்தால் மட்டுமே, உலக வெப்பமயமாதல் பிரச்னையை கையாள்வதில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்கும். பாரீஸ் உடன்படிக்கையின்படி, உலக வெப்பமயமாதலை 1.5°C அளவாகக் குறைப்பதில் பலன் கிடைக்க வேண்டுமெனில், வெளிப்படைத்தன்மையுடன் மேற்கண்ட வகையில் அனைவரும் ஒருமித்து செயல்பட வேண்டும். இந்திய அளவில் கார்பன் வெளியாகும் அளவை குறைக்கும் இலக்கை எட்டுவதில், கார்ப்பரேட் துறை தலைமை வகிக்கிறது. 50 முன்னணி இந்திய நிறுவனங்கள், இந்தியாவின் கார்பன் வெளியீட்டு அளவை 2030க்குள் 2% அளவுக்கு கட்டுப்படுத்த முன்வந்துள்ளன. இது, அரசு நிர்ணயித்த இலக்கைவிட அதிகமாகும்,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அகர்வால் பேசுகையில், ‘’அறிவியல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, கார்பன் வெளியிட்டு அளவை குறைப்பதற்கான திட்டங்களை பல்வேறு இந்திய நிறுவனங்களும் தற்போதுதான் முன்னெடுக்க தொடங்கியுள்ளன. ஆனால், ஒரே ஒரு நிறுவனம், விப்ரோ, மட்டுமே கார்பன் வெளியீட்டு அளவை சுழியமாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துச் செயல்பாடுகளை தொடங்கியுள்ளது. இந்த தகவல், SBTi-ன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது ,’’ என்றார்.
Translated by: Parthiban S
Also, read this in English