Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

Explainer: ஆரே மெட்ரோ கார் ஷெட் விவகாரம்- ஒரு முழுமையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை

English

Translated : Parthiban S

மகாராஷ்டிர மாநில அரசியலில், ஆளும் பாஜக அரசுக்கும், சிவசேனா கட்சிக்கும் இடையே பெரும் அரசியல் மோதல் ஏற்படுத்தும் ஒரு விவகாரமாக, ஆரே மெட்ரோ கார் ஷெட் திட்டம் மாறியுள்ளது. இதுபற்றி ஒரு முழுமையான ஆய்வு செய்து, இந்த செய்தித் தொகுப்பில் அளித்துள்ளோம்.

உண்மை அறிவோம்:

கடந்த 1949ல் மகாராஷ்டிரா மாநில அரசு நடத்தும் ஒரு பால் பண்ணையாக, ஆரே மில்க் காலனி பெயர் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பிறகு 2014ம் ஆண்டு மாநில அரசு ஒரு மெட்ரோ கார் ஷெட் ஒன்றை ஆரே பகுதியில் நிறுவ திட்டமிட்டது. இதையொட்டி, ஆரே நிலத்தின் ஒரு பகுதி, வர்த்தகப் பணிகளுக்காக திறந்துவிடப்பட்டது. மும்பையில் 33.5 கிமீ நீளத்திற்கு அமைய உள்ள Colaba – Bandra – SEEPZ மெட்ரோ திட்டத்திற்காக, ஆரேவில் பாதாள கார் ஷெட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம், அப்போதைய தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜக மாநில அரசுக்கும், சிவ சேனா மற்றும் யுவ சேனா தலைவர் ஆதித்யா தாக்கரேவுக்கும் இடையே மோதல் ஏற்பட வழிவகுத்தது.

ஆரே காலனியை ஒரு வனப்பகுதியாக அறிவித்து, அங்கே மெட்ரோ ஷெட் பணிகளுக்காக 2,500 மரங்களை மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (எம்எம்ஆர்சிஎல்) வெட்டுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை கடந்த 2019, அக்டோபர் 4 அன்று மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ஆரே பகுதியில் தேவைக்கு அதிகமான மரங்களை வெட்டக்கூடாது என்றும், இந்த விவகாரம் பற்றி அவ்வப்போது உண்மை நிலை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டது. ஆம், அந்த பகுதியில் ஏற்கனவே ஏராளமான மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டிருந்தன. சுமார் 2,141 மரங்கள் வெட்டப்பட்டதாக, உச்ச நீதிமன்றத்திற்கு எம்எம்ஆர்சிஎல் பதில் அளித்தது.

ஆரே – ஒரு வனப்பகுதியா, இல்லையா?

ஆரே காலனியில் மரங்கள் வெட்டுவதையும், அங்கே மெட்ரோ ஷெட் நிறுவுவதையும் ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் ஆரே ஒரு வனப்பகுதி அல்ல என்றே கூறுகிறார்கள். மகாராஷ்டிரா மாநில அரசு கூட, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு அளித்த பதில் ஒன்றில், பசுமையாக இருப்பதாலேயே ஆரே காலனியை ஒரு வனப்பகுதியாக அறிவித்திட முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

2019 நவம்பரில், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி (MVA) ஆட்சியை கைப்பற்றியதும், 3,166 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆரே காலனியின், ஐந்தில் ஒரு பகுதி அதாவது, 600 ஏக்கர் பகுதியை மட்டும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்தது. அத்துடன், முந்தைய பாஜக கூட்டணி அரசு கொண்டுவந்த ஆரே மெட்ரோ ஷெட் திட்டத்தையும் கைவிடுவதாக, உத்தவ் தாக்கரே அரசு அறிவித்தது. இது ஆரே பகுதியை வனமாக அறிவிக்கும் முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சிவில் சமூக அமைப்புகள் உள்ளடங்கிய பொதுமக்கள் தரப்பு, ‘’ஆரே ஒரு வனப்பகுதி அல்ல’’ என்ற கருத்தை முற்றாக மறுதலிப்பதோடு, அது கண்டிப்பாக ஒரு வனப்பகுதிதான் என்ற முனைப்பில், எந்த விலை கொடுத்தேனும் மனித சுரண்டலில் இருந்து அதனை பாதுகாக்க வேண்டும் என்று களமிறங்கியுள்ளனர். இதன் காரணமாக, ஒரு வனப்பகுதிக்கான வரையறை என்பது என்ன என்ற விவாதம் எழுந்துள்ளது. தவிர, ஆரே நிலப்பகுதிக்கான வகைப்பாடு மற்றும் உரிமையாளர் யார் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

இந்த இடத்தில், கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட ஒரு தீர்ப்பை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதில், குறிப்பிட்ட நிலப்பரப்பில் மேற்கொண்டு ஏதேனும் காடுகளை அழிக்கும் பணிகளை செய்யும்போது அதன் நில வகைப்பாடு, உரிமையாளர் பற்றி தேவையற்ற கேள்விகள் கேட்கக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ‘’வனப்பகுதி’’ என்றால் டிக்‌ஷனரியில் என்ன அர்த்தம் உள்ளதோ, அதுதான் இந்த இடத்திற்கும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 1996, டிசம்பர் 12ம் தேதியிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றில் (டிஎன் கோதவர்மன் திருமுல்பட் Vs இந்திய ஒன்றிய அரசு), ‘’நிலங்களை வகைப்படுத்துதல், அவற்றின் உரிமையாளர் யார் என்ற கேள்வியை முன்வைத்து கேட்பாரற்ற நிலப்பரப்புகளை சுரண்டும் பணிகளை தொடர்ந்து செய்தால், வனங்கள் அழிந்து சூழலியல் சீர்கேடுகள் ஏற்படக்கூடும்; எனவே, வனப்பகுதிகளை தற்போது இருக்கும் வகையிலேயே தொடர்ந்து பாதுக்கும் நோக்கில், வன பாதுகாப்புச் சட்டம் 1980, நடைமுறைப்படுத்தப்படுகிறது,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரே காலனியை பொறுத்தவரையில், அது இன்றளவும் ஒரு வனப்பகுதியாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், வனம் என்பதற்கு தேவையான தகுதிகளை அது பெற்றிருக்கிறது. Aarey Milk Colony, Mumbai as Forest Territory-A Status Report-ன் படி ஆரேவில் உள்ள உயிர்ச்சூழல் (தாவரங்கள், விலங்கினங்கள்) பற்றி விரிவாக ஆய்வுப்படுத்தி, வனம் என்ற வகைப்பாட்டில் சேர்க்கத் தேவையான ஒன்றுதான் என உறுதிப்படுத்தியுள்ளது. உண்மையில், சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவின் ஒரு நீட்சிதான் இந்த ஆரே என்பதால், அதனை வனமாக அங்கீகரிப்பதில் தவறில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆரேவில், புதர்க்காடுகள், பாறைக் குன்றுகள், சீசன் தோறும் பூக்கும் சதுப்பு நிலக் காடுகள் மற்றும் புல்வெளிகள் இது தவிர, சிறுத்தைகள், மலைப்பாம்புகள் மற்றும் காட்டுப் பூனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான வனவிலங்குகள் இடம்பெற்றுள்ளன. (Adhya 2015; Shinde 2017).       

மேலும், 30,000 கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கும் மையமாக ஆரே உள்ளது. தவிர, கால்நடைகளை மேய்க்க, அடுப்பெரிக்கும் விறகு பொறுக்க மற்றும் பலவிதமான வன விளைப் பொருட்களை பயன்படுத்த இப்படி வாழ்வாதார தேவைகள் அனைத்திற்கும் ஆரே காடுகளை நம்பியே அப்பகுதி மக்கள் உள்ளனர்.  
 
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சி (ஜேஐசிஏ) மும்பை மெட்ரோவுக்கு தரும் கடன் தொகையில் மேலும் ரூ.5,000 கோடி சேர்த்து வழங்குவதாகக் கூறியுள்ளது. Down to Earth வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில், ‘’ஜேஐசிஏ.,வுக்கு  மும்பை மெட்ரோ அனுப்பிய சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீட்டு அறிக்கையில், ஆரே பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை,’’ என்று கூறப்பட்டுள்ளது. அந்த பகுதியில், அடர்ந்த காடுகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாக, Down to Earth தெரிவிக்கிறது. அத்துடன், அங்கே உள்ள ஒரு அடர்ந்த வனப்பகுதிக்கு, மகாராஷ்டிரா மாநில வனத்துறை உரிமை கேட்டு, விண்ணப்பித்துள்ளதாகவும், Down to Earth குறிப்பிடுகிறது.

ஆரே மெட்ரோ கார் ஷெட் தற்போதைய நிலை

புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, மெட்ரோ கார் ஷெட் திட்டத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது. இந்த அரசின் துணை முதலமைச்சராக உள்ள தேவேந்திர ஃபட்னவிஸ் கடந்த ஜூன் 30, 2022 அன்று, ஆரே பகுதியில் இந்த திட்டம் மீண்டும் தொடங்குவதாக அறிவித்தார். மேலும், இந்த இடத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும், இது ஒரு வனப்பகுதி கூட இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் பாதிப்பு நிறைந்த மண்டலம் என்பதால், ஆரே காலனியில் மெட்ரோ ஷெட் அமைய உள்ள இடத்தை உள்ளடக்கிய 407 ஏக்கர் நிலப்பரப்பை மட்டும் தனித்து விட வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் பேசுகையில், ‘’மெட்ரோ கார் ஷெட் அமைக்கப்பட்டால், ஆரே பகுதியின் நீர்ப்பிடிப்பு சக்தி குறையும். அங்கே மழை பெய்வதும் படிப்படியாகக் குறையும். அங்குள்ள மிதி ஆறு ஓடுவதற்கான வழித்தடம் மறிக்கப்படும் என்பதால், மழைக்காலங்களில், அந்த ஆற்று நீர் வழி மாறி, சகாலா பகுதிக்குள் புகுந்து வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும். இங்குள்ள புல்வெளிகள், புதர்க்காடுகளின் வளர்ச்சி மட்டுப்படும். வெறும் கால்வாய் வெட்டி அபரிதமான மழை நீரை கடலுக்குள் கலந்துவிட்டால் மட்டும் பிரச்னை தீராது. அப்படி செய்ய முயன்றால் அது தோல்வியில்தான் முடியும். இங்கே வாழும் பழங்குடியின மக்கள் விரட்டியடிக்கப்படும் சூழல் ஏற்படும்,’’ என்று தெரிவிக்கின்றனர்.

ஆரே பகுதியை சார்ந்து 10,000க்கும் அதிகமான ஆதிவாசிகள் வசிக்கின்றனர். இவர்களில், கட்கரிஸ், மகாதேவ் கோலிஸ், மள்ளர் கோலிஸ், வார்லிஸ் உள்ளிட்ட 27 வகையான பிரிவுகள் உள்ளன. ஆடு, கோழி போன்ற கால்நடைகள் வளர்ப்பது, வாழை, பலா மற்றும் நெல் சாகுபடி செய்வது போன்றவையே இவர்களின் வாழ்வாதார தொழில்கள். இவர்களின் தினசரி வாழ்வுக்கு, ஆரே வனப்பகுதிதான் ஜீவ நாடியாக உள்ளது. இவர்கள் வன உரிமைச்சட்டம் 2006ன் கீழ் ஆரேவில் வாழ பல்வேறு உரிமைகளை தங்களுக்கு வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர். 

கூடுதல் விளக்கத்திற்கு, The Wire வெளியிட்ட செய்தியை படிக்கவும்.

இது மட்டுமின்றி, மும்பை போன்ற ஒரு நெரிசலான வாழிடத்தில், சாதாரண ரயில் வழித்தடங்களை விட, மெட்ரோ ரயில் வழித்தடங்கள் காரணமாக, வளிமண்டலத்தில் கலக்கும் CO2 அளவு பன்மடங்கு அதிரிப்பதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள மெட்ரோ ரயில் வழித்தடங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவு எவ்வளவு, அவை சுற்றுச்சூழல் மற்றும் வளிமண்டலத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நிபுணர்கள் சொல்வதென்ன?

மேற்கண்ட விவகாரம் பற்றி நாம் காலநிலை விஞ்ஞானி டாக்டர். பார்த்தா ஜே தாஸ் என்பவரிடம் விளக்கம் கேட்டோம். அவர் கூறியது பின்வருமாறு:

இந்திய அளவில் Green House Gases எனப்படும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் மற்றும் கார்பன் மோனாக்சைடு (CO), காரீயம் போன்றவை காற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை குறைக்கும் நோக்கிலேயே இந்திய அளவில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. யதார்த்தம் என்னவெனில், மெட்ரோ ரயில் சேவையால் காற்றில் மாசுக்கள் கலப்பதை குறிப்பிடத்தக்க அளவு குறைகிறது. அதேசமயம், பசுமை இல்ல வாயுக்கள் குறிப்பாக CO2 வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் மெட்ரோ ரயில் கட்டமைப்பு தோல்வியடைந்துவிட்டது. இந்த தகவலை, சோனி மற்றும் சந்தால் (2018) நடத்திய பல்வேறு ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

உதாரணமாக, சர்மா என்பவர் 2014ம் ஆண்டு நடத்திய ஆய்வில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் டெல்லி மெட்ரோ தோல்வியடைந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் கார்கள் பயன்பாடு போன்றவற்றுக்கு மாற்றாக பலரும் மெட்ரோ சேவையை உபயோகிப்பார்கள்; இதன் விளைவாக, மெட்ரோ ரயில் திட்டங்கள், CO2 வெளியேற்றத்தை பெரிதும் கட்டுப்படுத்தி, பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்ற அளவை குறைக்கும் இலக்கை எட்ட உதவும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆய்வு முடிவுகளோ வேறு மாதிரியாக உள்ளன.

எனினும், சமீபத்திய ஆய்வுகள் சிலவற்றில், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில், மெட்ரோ அமைப்பு கணிசமான அளவு மேம்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. மும்பையை பொறுத்தவரை, மெட்ரோ ரயில் நிர்வாகம் எத்தகைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, காற்று மாசு மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை குறைக்கப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும். 
————————

Anuraag Baruah
Anuraag Baruah
Articles: 6

One comment

Comments are closed.